வர்த்தக துளிகள்: ஏற்றுமதியாளர் சான்றிதழ்புதிய நடைமுறை அறிமுகம்
வர்த்தக துளிகள்: ஏற்றுமதியாளர் சான்றிதழ்புதிய நடைமுறை அறிமுகம்
ADDED : ஜன 29, 2025 11:20 PM

புதுடில்லி:ஏற்றுமதியாளர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நடைமுறையை எளிதாக்கவும், வர்த்தக செயல்திறனை மேம்படுத்தவும், மத்திய அரசு மேம்படுத்தப்பட்ட மூலச் சான்றிதழ் 2.0 அமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஒரே இறக்குமதியாளர் - ஏற்றுமதியாளர் குறியீட்டின் கீழ், ஏற்றுமதியாளர்களுக்கு சாதகமான பல அம்சங்களுடன், வெளிநாட்டு வர்த்தக பொது இயக்குனரகம் இதனை வெளியிட்டுள்ளது.
இதுவரை இந்த அமைப்பில் 'டிஜிட்டல் சிக்னேச்சர் டோக்கன்'கள் மட்டுமே எடுத்துக்கொள்ளப்பட்டு வந்த நிலையில், தற்போது ஆதார் அடிப்படையிலான மின் கையொப்பத்தை ஏற்றுக்கொள்ளும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த 'டாஷ்போர்டு' எனும் தகவல் மையம், ஏற்றுமதியாளர்களுக்கு மூலச் சான்றிதழ் தொடர்பான சேவைகள், இலவச வர்த்தக ஒப்பந்தம் மற்றும் வர்த்தக நிகழ்வுகள் குறித்த தகவல்களும் இதில் இடம்பெற்றுள்ளன.