ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்
டைம்லைன்
தற்போதைய செய்தி
தினமலர் டிவி
ப்ரீமியம்
தமிழகம்
இந்தியா
உலகம்
வர்த்தகம்
விளையாட்டு
கல்விமலர்
டீ கடை பெஞ்ச்
தினம் தினம்
ஜோசியம்
காலண்டர்
ஆன்மிகம்
வாராவாரம்
இணைப்பு மலர்
போட்டோ
உலக தமிழர்
ஸ்பெஷல்
உள்ளூர் செய்திகள்
/ செய்திகள் / வர்த்தகம் / பொது / வர்த்தக துளிகள் / வர்த்தக துளிகள்
/
செய்திகள்
பொது
வர்த்தக துளிகள்
ADDED : மார் 18, 2025 07:08 AM
லட்சுமி வேணு நியமனம்சென்னையை தலைமையிடமாக கொண்டு, டிராக்டர்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள 'டாபே' நிறுவனத்தின் துணை தலைவராக லட்சுமி வேணு நியமிக்கப்பட்டு உள்ளார். அமெரிக்காவின் யேல் பல்கலை.,யில் பட்டப்படிப்பையும், பிரிட்டனின் வார்விக் பல்கலை.,யில் இன்ஜினியரிங் மேலாண்மை படிப்பில் டாக்டர் பட்டமும் பெற்றுள்ள லட்சுமி வேணு, டிராக்டர், வாகன உபகரணங்கள் தயாரிப்பு துறையில் அனுபவமிக்கவர். மேலும், மற்றொரு வாகன உபகரணங்கள் தயாரிப்பாளரான சுந்தரம் -- கிளாட்டன் நிறுவனத்தில் மேலாண் இயக்குநராகவும் பணியாற்றி வருகிறார்.
இண்டஸ்இண்ட் பங்கு உயர்வுமும்பையை தலைமையிடமாக கொண்ட இண்டஸ் இண்ட் வங்கியின் முன்பேர வணிக போர்ட்போலியோவில் 2.4 சதவீதம் முரண்பாடுகள் கண்டறியப்பட்டதை தொடர்ந்து, கடந்த வாரம் இந்நிறுவன பங்குகள் கடும் சரிவு கண்டன. இது தொடர்பாக ரிசர்வ் வங்கி, இண்டஸ் இண்ட் வங்கியின் நிதி நிலைமை வலுவாக இருப்பதாக முதலீட்டாளர்களுக்கு கடந்த சனிக்கிழமையன்று உறுதி அளித்தது. இதனையடுத்து, நேற்றைய வர்த்தகத்தின் போது, இண்டஸ் இண்ட் வங்கி பங்குகள், 5 சதவீதம் அளவுக்கு உயர்வு கண்டன. வர்த்தக நேர முடிவில், 0.57 சதவீத உயர்வுடன் அது நிறைவடைந்தது.
நிகர நேரடி வரி வசூல்இந்த நிதியாண்டின் மார்ச் 16 வரையிலான காலத்தில், நிகர நேரடி வரி வசூல், 13.13 சதவீதம் வளர்ச்சி கண்டு, 21.26 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது. இதற்கு, முன்கூட்டியே வரி செலுத்துவது அதிகரித்தது முக்கிய காரணமாகும். மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தரவுகளின்படி, முந்தைய ஆண்டோடு ஒப்பிடுகையில், கார்ப்பரேட் அல்லாத வரி வசூல், 17 சதவீதம் அதிகரித்து, 11.01 லட்சம் கோடி ரூபாயாகவும், கார்ப்பரேட் வரி வசூல், 7 சதவீதம் அதிகரித்து, 9.69 லட்சம் கோடி ரூபாயாகவும், பங்கு பரிவர்த்தனை வரி, 56 சதவீதம் அதிகரித்து, 53,095 கோடி ரூபாய் வசூலானது.