
மூன்று மணி நேரத்தில் முடிந்தது என்.எஸ்.டி.எல்., பங்கு விண்ணப்பம்
புதிய பங்கு வெளியீடுக்கு வந்த முதல் நாளான நேற்று, மூன்று மணி நேரத்திலேயே என்.எஸ்.டி.எல்., பங்கு விண்ணப்பங்கள் முழுதும் முடிவடைந்தன. தேவை அதிகமாக இருப்பதால், அதிகபட்சமாக நிறுவனம் சாராத முதலீட்டாளர்களிடம் இருந்து 1.39 மடங்கும், சில்லரை முதலீட்டாளர்களிடம் இருந்து 1.12 மடங்கும் விண்ணப்பங்கள் வந்துள்ளன. 4,011.60 கோடி ரூபாய் முதலீட்டை திரட்ட ஐ.பி.ஓ., வந்துள்ள என்.எஸ்.டி.எல்., நிறுவனத்தின் பங்கு ஒன்றின் விலை, 760 -- 800 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.
இந்திய பிரிவு நிறுவனம் முழுதும் ஷ்னைடர் எலக்ட்ரிக் வசமானது
சிங்கப்பூரை தளமாக கொண்ட முதலீடு நிறுவனமான டெமாசெக்கிடம் இருந்து ஷ்னைடர் எலக்ட்ரிக் இந்தியாவின் 35 சதவீதம் பங்குகளை, 55,555 கோடி ரூபாய்க்கு, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தொழில் துறை தொழில்நுட்ப நிறுவனமான ஷ்னைடர் எலக்ட்ரிக் கையகப்படுத்தி உள்ளது. இந்தியாவின் உள்நாட்டு சந்தை மற்றும் ஆசிய பசிபிக்கில் வளர்ந்து வரும் உற்பத்தி மையமாக இந்தியாவை மாற்றும் உத்தியுடன் இதை மேற்கொண்டுள்ளது. மேலும், மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா, மேக் இன் இந்தியா திட்டங்களின் ஆதரவுடன், தன் உற்பத்தி திறனை 2.5 -- 3 மடங்கு அதிகரிக்க திட்டமிட்டு உள்ளது.

