
தமிழக சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் வருவாய் ரூ.243 கோடியாக உயர்வு
த மிழக சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் வருவாய், கடந்த 2020 - 21ல் 49.11 கோடி ரூபாயாக இருந்ததைக் காட்டிலும், ஐந்து மடங்கு உயர்ந்து 2023 - 24ல் 243.31 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. மேலும், கழகத்தின் கீழ் இயங்கும் 26 தமிழ்நாடு ஹோட்டல்களின் ஆன்லைன் முன்பதிவுகளால், கடந்த 2021 மே முதல், நடப்பாண்டு ஜன., வரை 129.28 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி சாதனை படைத்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
'பாக்ஸ்கான்' பெங்களூரு ஆலையில் 'ஐபோன் 17' மாடல் உற்பத்தி துவக்கம்
க ர்நாடக மாநிலம் பெங்களூரு தேவனஹள்ளியில் பாக்ஸ்கான் நிறுவனம் அமைத்துள்ள ஐபோன் உற்பத்தி ஆலை, தன் செயல்பாட்டை ஐபோன் 17 மாடல் உற்பத்தியுடன் துவங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் நுாற்றுக்கணக்கான சீன பொறியாளர்கள் இந்திய ஆலைகளில் இருந்து திரும்பிச் சென்ற நிலையில், பாக்ஸ்கான் நிறுவனம், பல்வேறு இடங்களில் இருந்து நிபுணர்களை பணிக்கு அமர்த்தி உற்பத்தியை தொடர்ந்து வருவதாக கூறப்படுகிறது.
ரூ.21,000 கோடி பங்குகளை விற்ற அன்னிய பங்கு முதலீட்டாளர்கள்
ஆ கஸ்ட் மாதத்தின் முதல் பாதியில், அன்னிய முதலீட்டாளர்கள் 21,000 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்றுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இதன் வாயிலாக, நடப்பாண்டில் இதுவரை அன்னிய பங்கு முதலீட்டாளர்களின் மொத்த பங்கு விற்பனை 1.16 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளது. இந்திய - அமெரிக்க வர்த்தக பதற்றம், மற்றும் பலவீனமான ரூபாய் மதிப்பு உள்ளிட்ட காரணங்களினால், இந்த பங்கு விற்பனை நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.