
சக பணியாளருடன் ரகசிய உறவு நெஸ்லே சி.இ.ஓ., பதவி நீக்கம்
நெ ஸ்லே நிறுவனத்தில், சக பெண் பணியாளருடன் ரகசிய உறவில் இருந்தது விசாரணையில் உறுதியானதை அடுத்து, அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து லாரன்ட் பிரெக்ஸி நீக்கப்பட்டு உள்ளார். இதனையடுத்து, நேற்று வர்த்தகம் துவங்கிய போதே, சுவிஸ் பங்குச்சந்தையில் நெஸ்லே நிறுவன பங்குகள், 2 சதவீதம் சரிவை கண்டன. பிரெக்ஸி சி.இ.ஓ.,வாக பொறுப்பேற்றதில் இருந்து, விற்பனை மற்றும் லாபம் சரிவால், நெஸ்லே பங்குகள் கிட்டத்தட்ட 17 சதவீதம் அளவுக்கு சரிவை கண்டுள்ளன. மேலும், புதிய சி.இ.ஓ.,வாக பிலிப் நவரட்டில் நியமிக்கப்பட்டு உள்ளார்.
மிச்செலின் குழுமத்திடம் இருந்து கேம்சோவை கைப்பற்றிய சியட்
மி ச்செலின் குழுமத்திடம் இருந்து கேம்சோ கட்டுமான இயந்திரங்களுக்கான டயர் வர்த்தகத்தை, கிட்டத்தட்ட 1,935 கோடி ரூபாய்க்கு கைப்பற்றி இருப்பதாக, சியட் நிறுவனம் அறிவித்து உள்ளது. இதன்படி, இலங்கையில் உள்ள கேம்சோ நிறுவனத்தின் இரண்டு ஆலைகள் சியட் வசமாகின்றன. புதிய கையகப்படுத்தல் வாயிலாக நிறுவனத்தின் வருவாய் 10 - 15 சதவீதம் வரை அதிகரிக்கும் எனவும், ஐரோப்பா, வட அமெரிக்கா மற்றும் பிரேசில், ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்க சந்தை யில் கவனம் செலுத்த உள்ளதாகவும் தெரிவித் துள்ளது.