
நேபாளத்தில் நீடிக்கும் கலவரம் இந்திய நிறுவனங்கள் பாதிப்பு
நே பாளத்தில் கடந்த சில தினங்களாக நீடிக்கும் கலவரம் காரணமாக, தங்கள் ஆலைகளில் உற்பத்தி பாதிப்பை சந்தித்து உள்ளதாக, இந்திய நுகர்பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. தொழிலாளர்களின் பாதுகாப்பு முக்கியம் என்பதால், தற்காலிகமாக உற்பத்தியை நிறுத்தி இருப்பதாக பிரிட்டானியாவும், நேபாளின் பிர்கஞ்ச் பகுதியில் தொழிலாளர்கள் ஆலைக்கு வர முடியாததால், பாதியளவு உற்பத்தி நிறுத்தப்பட்டு இருப்பதாக டாபர் நிறுவனமும் தெரிவித்துள்ளன.
உள்நாட்டு கிளவுடு மேம்பாடு சி-டாக் உடன் டி.சி.எஸ்., ஒப்பந்தம்
இ ந்தியாவின் உள்நாட்டு கிளவுடு சூழலை மேம்படுத்துவது தொடர்பாக, சி - டாக் எனும் அட்வான்ஸ்டு கம்யூட்டிங் மேம்பாட்டு மையத்துடன் டி.சி.எஸ்., நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் வாயிலாக, நாட்டின் தரவுகளை உள்நாட்டில் சேமிப்பது கட்டாயம் எனும் நிலையில், ஆராய்ச்சி வாயிலாக உள்நாட்டு தொழில்நுட்பத்தை மேம்படுத்தல், ஏ.ஐ., சார்ந்த கிளவுடு தளங்கள் உருவாக்குதல், முக்கியமான பொதுத்துறை சேவைகளை டிஜிட்டல்மயமாக்க ஆதரவளித்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஸ்டார் ஹெல்த் மருத்துவ காப்பீடு பணமில்லா சேவை நிறுத்தம்
நி யாயமற்ற வர்த்தக நடைமுறை காரணமாக ஸ்டார் மருத்துவ காப்பீடு திட்டங்களுக்கான ரொக்கமில்லா சேவையை, வரும் 22ம் தேதி முதல் நிறுத்த உள்ளதாக இந்திய மருத்துவமனைகள் கூட்டமைப்பு எச்சரித்து உள்ளது.
நாடு முழுதும் 15,000க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளை உறுப்பினர்களாக கொண்ட கூட்டமைப்பு, ஏற்கனவே செலவுகள் அதிகரித்து வரும் சூழலில், பழைய கட்டண விகிதத்தை மாற்றாமல் இருப்பதோடு, மேலும் கட்டணத்தை குறைக்க வலியுறுத்துவதாக ஸ்டார் ஹெல்த் மீது குற்றம்சாட்டி உள்ளது.