
எஸ் பேங்கின் 20% பங்குகளை வாங்கியது எஸ்.எம்.பி.சி.,
எஸ் பேங்கின் 20 சதவீத பங்குகளை வாங்கியுள்ளதாக ஜப்பானைச் சேர்ந்த எஸ்.எம்.பி.சி., வங்கி தெரிவித்துள்ளது. நேற்று முன் தினம் தான் எஸ்.பி.ஐ., வங்கியிடமிருந்து எஸ் பேங்கின்
13.18 சதவீத பங்குகளை வாங்கிய நிலையில், மீதமுள்ள பங்குகளையும் வாங்கியுள்ளதாக எஸ்.எம்.பி.சி., தெரிவித்துள்ளது. இந்த பங்குகளை பந்தன், ஆக்சிஸ், கோட்டக், பெடரல் உள்ளிட்ட வங்கிகளிடமிருந்து வாங்கியிருக்கும் என கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து எஸ் பேங்கின் மிகப்பெரிய பங்குதாரராக எஸ்.எம்.பி.சி., உருவெடுத்துள்ளது.
ரூ.7 லட்சம் வாடகையில் செபி தலைவருக்கு வீடு
செ பி தலைவர் துஹின் காந்த பாண்டேவுக்கு, மும்பையின் பிரபாதேவி பகுதியில், மாதம் 7 லட்சம் ரூபாய் வாடகையில், பெரிய ஐந்து பெட்ரூம் வீடு, மூன்று ஆண்டு காலத்துக்கு வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளது. இதன் படி, முதல் ஆண்டில் மாத வாடகை 7 லட்சம் ரூபாயாக இருக்கும். இரண்டாவது ஆண்டில் 7.35 லட்சம் ரூபாயாகவும்; மூன்றாம் ஆண்டில் 7.71 லட்சம் ரூபாயாகவும் படிப்படியாக அதிகரிக்கும். மூன்று ஆண்டு காலத்துக்கு மொத்தம் 2.65 கோடி ரூபாய் வாடகை செலுத்தப்பட உள்ளது.