UPDATED : அக் 04, 2025 12:47 AM
ADDED : அக் 04, 2025 12:46 AM

சென்னையில் பவர்ஸ்கூல் சிறப்பு மையம் துவக்கம்
அ மெரிக்காவைச் சேர்ந்த 'பவர்ஸ்கூல்' நிறுவனம், சென்னையில் புதிய சிறப்பு மையத்தை துவங்கியுள்ளது. உலகெங்கும் 90க்கும் மேற்பட்ட நாடுகளில் 6 கோடிக்கும் அதிகமான மாணவர்களுக்கு கிளவுட் அடிப்படையில் கல்வி சேவை வழங்கி வரும் இந்நிறுவனம், இந்தியாவில் தன் செயல்பாடுகளை விரிவுபடுத்த இந்த மையத்தை துவங்கியுள்ளது.
![]() |
பவர்ஸ்கூல், ஆரம்ப பள்ளி முதல் 12ம் வகுப்பு வரை முழு பள்ளிக் கல்வியையும் வழங்குகிறது.
இந்த மையம், 300 மாணவர்கள் அமரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு இந்தியா முழுதும் 1,475 பணியாளர்களும், சென்னையில் 175 பணியாளர்களும் உள்ளனர்.
மருந்து ஆராய்ச்சியில் முதலீடு வி ண்ணப்பங்கள் வரவேற்பு
ம ருந்து துறையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை ஊக்குவிக்கும் பி.ஆர்.ஐ.பி., திட்டத்தின் கீழ், விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க கடந்த 1ம் தேதி பிரத்யேக இணையதளம் துவங்கப்பட்டது. சர்வதேச அளவில் இந்திய மருந்து துறையை போட்டித்தன்மை மிக்கதாகவும், கண்டுபிடிப்புகளை மேற்கொள்ளும் துறையாகவும் மாற்ற இத்திட்டம் அறிவிக்கப்பட்டது. மொத்தம் 5,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 300 திட்டங்களுக்கு ஆதரவளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 11,000 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.
அமெரிக்க எல்.பி.ஜி., இறக்குமதி இந்திய நிறுவனங்கள் ஆர்டர்?
இ ந்திய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், அமெரிக்காவிலிருந்து எல்.பி.ஜி., இறக்குமதி செய்யவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்க எல்.பி.ஜி., இறக்குமதியை சீனா குறைத்துள்ளதால், சர்வதேச சந்தையில் எல்.பி.ஜி., விலை குறைந்துள்ளது. இதைத்தொடர்ந்து, அமெரிக்க நிறுவனங்களுக்கு இந்தியா முதல் முறையாக நீண்ட கால ஒப்பந்தம் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அடுத்தாண்டில் மூன்று மாதங்களுக்கு மூன்று மிகப்பெரிய எல்.பி.ஜி., கேரியர்களை இறக்குமதி செய்ய ஒப்பந்தம் வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாட்டில் 60 சதவீதத்துக்கும் அதிகமான எரிவாயு தேவை இறக்குமதி வாயிலாகவே பூர்த்தி செய்யப்படுகிறது.