
இந்தியா, தென்கொரியா கூட்டு
மின்னணு பொருட்கள், மின்சார வாகன உபகரணங்கள் மற்றும் டிஜிட்டல் விநியோக தொடர் உள்ளிட்ட துறைகளில் கூட்டாக இணைந்து செயல்பட இந்தியா, தென்கொரியா ஒப்புதல் தெரிவித்துள்ளன. தென் ஆப்பிரிக்காவில் நடந்த ஜி20 வர்த்தக மற்றும் முதலீட்டு அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்ற மத்திய வர்த்தக இணையமைச்சர் ஜிதின் பிரசாதா, தென்கொரிய அமைச்சருடன் நடத்திய ஆலோசனையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
செஸ் வரி திருப்பி தர வலியுறுத்தல்
புதிய ஜி.எஸ்.டி., குறைப்பு அமலுக்கு வருவதற்கு முன்னர், வாகனங்களுக்கு செலுத்திய செஸ் என்ற கூடுதல் வரி காரணமாக 2,500 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக வாகன டீலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான எப்.ஏ.டி.ஏ., தெரிவித்துள்ளது. பயன்படுத்தப்படாமல் உள்ள இழப்பீட்டு செஸ் தொகையை, ஜி.எஸ்.டி., தொகைக்கு ஈடுசெய்யவோ, அல்லது அதனை ரீபண்டு தொகையாக திரும்ப பெறவோ அனுமதிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு அது கோரிக்கை விடுத்துள்ளது. இதனை அரசு, பரிசீலிக்காத பட்சத்தில் உச்சநீதிமன்றத்தை நாட எப்.ஏ.டி.ஏ., முடிவு செய்துள்ளது.