
'இரட்டை இன்ஜின்
ந ம் நாடு அடுத்தகட்ட வளர்ச்சியை அடைய வேண்டுமானால், வலுவான வங்கி அமைப்புடன், கடன் மூலதன சந்தையை உருவாக்க வேண்டும் என, தலைமை பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் தெரிவித்துள்ளார். மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், 'எரிசக்தி, லாஜிஸ்டிக்ஸ் மற்றும் இணைப்பு, தயாரிப்பு, மருத்துவம், தொழில்நுட்பம், உள்கட்டமைப்பு, நகரமயமாக்கல் ஆகியவற்றுக்கு அடுத்த 14 ஆண்டுகள் முதலீடுகள் தேவை. இதை வங்கிகளால் மட்டும் பூர்த்தி செய்ய இயலாது. இதற்கு, இரட்டை இன்ஜின் நிதி மாதிரி அடிப்படையாகும்' என தெரிவித்தார்.
ரூ.300 கோடியில் பேட்டரி ஆலை அமைக்கிறது சீன நிறுவனம்
இ ந்தியாவில் புதுப்பிக்கத்தக்க மின் கட்டமைப்பு மேம்படுத்தல் காரணமாக, பேட்டரிகளுக்கான தேவை அதிகரித்து வரும் நிலையில், சீனாவைச் சேர்ந்த என்விஷன் குழுமம், 300 கோடி ரூபாய் முதலீட்டில், 5 ஜிகாவாட் திறன் கொண்ட பேட்டரி ஆலையை அமைக்க திட்டமிட்டுள்ளது. சீனாவில் இருந்து செல்களை மட்டும் கொள்முதல் செய்ய உள்ள இந்நிறுவனம், இந்தியாவில் அந்த செல்களைப் பயன்படுத்தத் தேவையான ரேக்குகளையும், மென்பொருள் கட்டமைப்பையும் உருவாக்க முடிவு செய்துள்ளது.

