சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்
டைம்லைன்
தற்போதைய செய்தி
தினமலர் டிவி
ப்ரீமியம்
தமிழகம்
இந்தியா
உலகம்
வர்த்தகம்
விளையாட்டு
கல்விமலர்
டீ கடை பெஞ்ச்
தினம் தினம்
ஜோசியம்
காலண்டர்
ஆன்மிகம்
வாராவாரம்
இணைப்பு மலர்
போட்டோ
உலக தமிழர்
ஸ்பெஷல்
உள்ளூர் செய்திகள்
/ செய்திகள் / வர்த்தகம் / பொது / வர்த்தக துளிகள்2 / வர்த்தக துளிகள்2
/
செய்திகள்
பொது
வர்த்தக துளிகள்2
ADDED : ஜன 03, 2024 12:50 AM
நான்கு கூட்டு முயற்சி நிறுவனங்களை அமைப்பதற்கான ஒப்புதலை, நிதியமைச்சகத்திடம் இருந்து பெற்றதாக, 'எஸ்.ஜெ.வி.என்.,' நிறுவனம் தெரிவித்துள்ளது.இந்தியா மற்றும் நேபாளத்தில், மொத்தம் 8,778 மெகா வாட் திறனில், நீர் மற்றும் புதுப்பிக்கத்தக்க திட்டங்களை உருவாக்க, எஸ்.ஜெ.வி.என்., நிறுவனமும், மின் அமைச்சகமும் இணைந்து நான்கு கூட்டு முயற்சி நிறுவனங்களை அமைக்க, ஒப்புதல் பெற்றுள்ளன. அதன்படி, மஹாராஷ்டிரா மாநில மின் உற்பத்தி நிறுவனம், நேபாள மின்சார ஆணையம் மற்றும் 'ஜி.எம்.ஆர்., எனர்ஜி லிமிடெட்' உள்ளிட்டவற்றுடன் எஸ்.ஜெ.வி.என்., கூட்டுமுயற்சியில் ஈடுபட உள்ளது.
நடப்பு ஜனவரி- மார்ச் காலாண்டில், பொதுத்துறை நிறுவனங்களின், 500 கோடி ரூபாய்க்கும் அதிகமான செலவுகளுக்கான விதிமுறைகளை அரசாங்கம் தளர்த்தி உள்ளது. அதன்படி, நிதி ஆலோசகர்கள், எந்த நிலையிலும் நிதி செயலற்று நிற்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், நிதி சரியான நேரத்தில் வெளியிடப்படுவதை கண்காணிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில், மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் மூலதனச் செலவு, பட்ஜெட் இலக்கில், 52 சதவீதத்தை தொட்டு, 3.79 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.