விரைவாக ஏற்றுமதி செய்வதற்காக துாத்துக்குடியில் போக்குவரத்து பூங்கா
விரைவாக ஏற்றுமதி செய்வதற்காக துாத்துக்குடியில் போக்குவரத்து பூங்கா
ADDED : அக் 26, 2025 01:36 AM

சென்னை: தென் மாவட்டங்களில் ஏற்றுமதி, இறக்குமதி சரக்குகளை விரைவாக கையாள துாத்துக்குடியில் நவீன கட்டமைப்புகளுடன் கூடிய பல்முனைய சரக்கு போக்குவரத்து பூங்காவை, 'சிப்காட்' நிறுவனம் அமைக்க உள்ளது.
டில்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் அனைத்து சரக்குகளும் மையப்பகுதியான இடத்திற்கு எடுத்து வரப்படுகின்றன.
அங்கிருந்து, தனி சரக்கு ரயில்களில் ஏற்றப்பட்டு, துறைமுகங்களுக்கு அனுப்பப்படுகின்றன. இதனால், சரக்குகள் விரைவாக அனுப்பப் படுகின்றன.
தமிழக அரசின், 'டிட்கோ' நிறுவனம், சென்னை துறைமுகம், தேசிய நெடுஞ்சாலை தளவாட மேலாண்மை நிறுவனம், ரயில் விகாஸ் நிறுவனம் இணைந்து, திருவள்ளூர் மாவட்டம் மப்பேட்டில், 1,423 கோடி ரூபாயில், 182 ஏக்கரில் பல்முனைய சரக்கு போக்குவரத்து பூங்காவை அமைத்து வருகிறது.
அங்கு கிடங்கு, குளிர்ப்பதன கிடங்கு, பேக்கேஜிங் மையம், ஏற்றுமதி, இறக்குமதிக்கான நவீன சாதனங்கள் உள்ளிட்ட வசதிகள் இடம்பெறும்.
இதன் வாயிலாக ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் எடுத்து வரப்பட்டு, விரைவாக பேக்கிங் செய்து ஏற்றுமதி செய்யப்படும்.
இதேபோல், கோவை மாவட்டம், சூலுாரில், 216 ஏக்கரில் பல்முனைய சரக்கு போக்குவரத்து பூங்கா அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணி நடக்கிறது.
தற்போது, 25 லட்சம் கோடி ரூபாயாக உள்ள சரக்கு போக்குவரத்து மதிப்பு, 2030ல், 50 லட்சம் கோடி ரூபாயாக உயரும் என கணிப்பு தமிழக சரக்கு போக்குவரத்து துறையில், அடுத்த 10 ஆண்டுகளில், 63,000 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்த்து, 1.60 லட்சம் வேலைவாய்ப்பை உருவாக்க திட்டம்

