ADDED : மே 25, 2025 12:14 AM

மும்பை பங்குச் சந்தையில் 30 முன்னணி நிறுவனங்கள் இடம்பெற்றுள்ள சென்செக்ஸ் குறியீட்டில், இண்டஸ்இண்ட் வங்கி, நெஸ்லே இந்தியா ஆகியவற்றுக்கு பதிலாக டிரென்ட், பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனங்கள் இடம்பெற உள்ளன. வரும் ஜூன் 23 முதல் இந்த மாற்றம் அமலுக்கு வருகிறது.
பங்குச் சந்தையில் மூலதன புழக்கத்தை அதிகரிப்பதுடன், வர்த்தக முதலீட்டு நிதியானது குறியீட்டின் போக்குடன் பொருந்துவதற்காக அவ்வப்போது மறுசீரமைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
பி.எஸ்.இ., 100 குறியீட்டில், டிக்சன் டெக்னாலாஜிஸ், கோபோர்ஜ் மற்றும் இண்டஸ் டவர்ஸ் ஆகியவை இடம்பெற உள்ளன. இதுவரை இடம்பெற்றிருந்த பாரத் போர்ஜ், டாபர் இந்தியா மற்றும் சீமென்ஸ் நிறுவனங்கள் வெளியேற உள்ளன.
சென்செக்ஸ் 50 குறியீட்டில், பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ்க்கு பதிலாக இன்டர்குளோப் ஏவியேஷனும், ஹீரோ மோட்டோகார்ப்பிற்கு பதிலாக ஸ்ரீராம் பைனான்சும் இடம்பெற உள்ளன.
மேலும், பி.எஸ்.இ., பேங்கெக்ஸ் குறியீட்டில், கனரா வங்கிக்கு பதிலாக ஐ.டி.எப்.சி, பர்ஸ்ட் வங்கி இடம்பெற உள்ளது.