'இந்திய வரி விதிப்பு குறித்து டிரம்ப் கூறுவது சரியல்ல'
'இந்திய வரி விதிப்பு குறித்து டிரம்ப் கூறுவது சரியல்ல'
ADDED : செப் 20, 2024 10:56 PM

புதுடில்லி:இறக்குமதி வரி விதிப்பில் இந்தியா கொடுமை செய்வதாக அமெரிக்க அதிபர் வேட்பாளர் டொனால்டு டிரம்ப் கூறுவது நியாயமல்ல என உலக வர்த்தக ஆராய்ச்சி நிறுவனம் தன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:
உள்நாட்டு சந்தைகளை பாதுகாப்பதற்காக, பல்வேறு பொருட்களின் இறக்குமதிக்கு அதிக வரி விதிப்பது, உலக நாடுகள் பலவற்றில் வழக்கமான நடைமுறை தான். உலக வர்த்தக அமைப்பின், உலக வரிவிதிப்பு விபரங்கள் - 2023ன் படி, பல பொருட்களுக்கு அமெரிக்கா 100 சதவீதத்துக்கு மேல் இறக்குமதி வரி விதித்துள்ளது.
சில பொருட்களுக்கு இந்தியா கூடுதல் இறக்குமதி வரி விதித்தாலும், அந்த பொருட்களின் வர்த்தகத்தின்போது அதை பிரதிபலிப்பதில்லை. சராசரியான, வர்த்தக அளவின் அடிப்படையிலான வரிவிதிப்பே இந்தியாவின் கொள்கையாக உள்ளது.
எனவே, இறக்குமதி வரி விதிப்பில் இந்தியா கடுமை காட்டுவதாக டொனால்டு டிரம்ப் கூறியதில் நியாயம் இல்லை.
இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளது.