ADDED : செப் 04, 2025 11:23 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:ஆகஸ்ட் மாத இருசக்கர வாகன விற்பனை, 6.91 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், 16.34 லட்சம் இருசக்கர வாகனங்கள் விற்பனையான நிலையில், நடப்பாண்டு ஆகஸ்ட்டில், 17.47 லட்சம் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
ஹீரோ நிறுவனம், 5.19 லட்சம் வாகனங்களை விற்பனை செய்து முதல் இடத்தில் நீடிக்கிறது. 125 சி.சி., பிரிவில் முதல் க்ரூஸ் கன்ட்ரோல் வசதி கொண்ட பைக்கை இந்நிறுவனம் அண்மையில் அறிமுகப்படுத்தியது. ஹோண்டா நிறுவனம், 4.81 லட்சம் வாகனங்களை விற்பனை செய்து, இரண்டாம் இடத்தில் உள்ளது.