ADDED : மே 16, 2025 01:08 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடந்த ஏப்ரலில், நாட்டின் வேலைவாய்ப்பின்மை விகிதம் 5.10 சதவீதமாக இருப்பதாக மத்திய அரசு வெளியிட்ட புள்ளி விபரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக காலாண்டு, ஆண்டு அடிப்படையில் வேலைவாய்ப்பின்மை விகிதம் வெளியிடப்பட்டு வந்த நிலையில், தற்போது முதல்முறையாக, மாதாந்திர அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது. மதிப்பீட்டு காலத்தில் ஆண்கள் வேலைவாய்ப்பின்மை 5.20 சதவீதமாகவும்; பெண்கள் வேலைவாய்ப்பின்மை 5 சதவீதமாகவும் உள்ளது. குறிப்பாக, 29 வயதுக்கு உட்பட்டோருக்கான வேலைவாய்ப்பின்மை 13.80 சதவீதமாக உள்ளது.