அனிமேஷன் துறைக்கு உயர்கல்வி நிறுவனம் மத்திய அமைச்சரவை ஒப்புதல்
அனிமேஷன் துறைக்கு உயர்கல்வி நிறுவனம் மத்திய அமைச்சரவை ஒப்புதல்
ADDED : செப் 19, 2024 03:06 AM

புதுடில்லி:ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., போன்ற உயர்கல்வி நிறுவனங்களுக்கு நிகராக, அனிமேஷன், விஷுவல் எபெக்ட்ஸ், கேமிங், காமிக்ஸ் ஆகியவற்றுக்கான தேசிய சிறப்பு மையத்தை அமைக்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி தலைமையில், டில்லியில் மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
நாட்டில் அனிமேஷன் தொழில்நுட்பத்தின் சிறப்பான எதிர்காலம் கருதியும், இந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறையில் வெளிநாட்டு முதலீடுகளை கவரும் வகையிலும், மும்பையில் உயர்கல்வி நிறுவனத்தை ஏற்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
கடந்த, 2013ம் ஆண்டு நிறுவனங்கள் சட்டத்தின் 8 வது பிரிவின்கீழ் இதற்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.
ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., போன்ற உயர்கல்வி நிறுவனங்களுக்கு இணையான இந்த நிறுவனத்தில், அரசுடன் இந்திய வர்த்தக மற்றும் தொழில் சங்கங்களின் கூட்டமைப்பான 'பிக்கி' மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பான சி.ஐ.ஐ., ஆகிய அமைப்புகள் கூட்டாளிகளாக இருக்கும் என்றும் கூறப்பட்டுஉள்ளது.