ADDED : செப் 25, 2025 02:15 AM

புதுடில்லி:இந்தியாவின் டிஜிட்டல் பேமென்ட்ஸ் சேவையான யு.பி.ஐ., கத்தாரில் பயன்பாட் டுக்கு வந்துள்ளது. இது இந்திய சுற்றுலா பயணிகளுக்கு பலனளிக்கும்.
என்.பி.சி.ஐ., இன்டர்நேஷனல் பேமென்ட்ஸ், கத்தாரின் மிகப்பெரிய வங்கியான கத்தார் நேஷனல் பேங்க் உடன் இணைந்து இந்த சேவையை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன்படி, கத்தார் முழுதும் உள்ள கடைகளில், கியு.ஆர்., குறியீட்டின் வாயிலாக யு.பி.ஐ., சேவையை பயன்படுத்தி பணம் செலுத்தலாம்.
சில்லரை வர்த்தக சங்கிலியான கத்தார் ட்யூட்டி ப்ரீ, அந்நாட்டில் யு.பி.ஐ., வாயிலாக பணம் பெற்ற முதல் நிறுவனம் என்ற பெருமையை பெற்றுள்ளது. கத்தாருக்கு செல்லும் இந்தியர்கள் இனி கரன்சி எக்ஸ்சேஞ்ச் செய்ய தேவையில்லை. தங்கள் மொபைல் போன் வாயிலாகவே எளிதாக பணம் செலுத்த முடியும்.
கத்தாரில் துவங்கப்பட்டு உள்ள யு.பி.ஐ., சேவை, இந்திய பயணிகளுக்கு பெரும் வசதியை அளிப்பதோடு, டிஜிட்டல் பரிவர்த்தனைகளை சர்வதேச அளவில் விரிவுபடுத்த உதவும்.
-ரித்தேஷ் சுக்லா,
நிர்வாக இயக்குநர் ,
என்.பி.சி.ஐ., பேமென்ட்ஸ் இன்டர்நேஷனல்