ஏப்ரல் மாத சரிவுக்கு பின் மீண்ட யு.பி.ஐ., பண பரிவர்த்தனைகள்
ஏப்ரல் மாத சரிவுக்கு பின் மீண்ட யு.பி.ஐ., பண பரிவர்த்தனைகள்
ADDED : ஜூன் 02, 2025 01:04 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:கடந்த மே மாதத்தில் யு.பி.ஐ., பண பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை, ஏப்ரல் மாதத்தை விட 4.40 சதவீதம் அதிகரித்து 1,868 கோடியாக உயர்ந்துஉள்ளது.
யு.பி.ஐ., வெளியிட்ட தரவுகளின்படி, கடந்த மே மாதத்தில் பண பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை 1,868 கோடியாக வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இது முந்தைய மாதமான ஏப்ரலில் மேற்கொள்ளப்பட்ட பரிவர்த்தனை எண்ணிக்கையான 1,789 கோடியைக் காட்டிலும் 4.40 சதவீதம் அதிகமாகும்.
ஆண்டின் அடிப்படையில் பார்க்கையில், முந்தைய ஆண்டைக் காட்டிலும் 33 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துஉள்ளது. மதிப்பின் அடிப்படையில், கடந்த மே மாதம் 25.14 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இது முந்தைய மாதமான ஏப்ரலில் 23.95 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. மாதத்தின் அடிப்படையில் 5 சதவீதமும், ஆண்டின் அடிப்படையில் 23 சதவீதமும் வளர்ச்சியாகும்.