ADDED : நவ 02, 2025 12:33 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: பண்டிகை கால செலவு அதிகரிப்பு மற்றும் ஜி.எஸ்.டி., குறைப்பு காரணமாக, யு.பி.ஐ., பரிவர்த்தனைகளின் எண்ணிக்கையும், மதிப்பும் கடந்த மாதம் இதுவரை இல்லாத உச்சத்தை எட்டியுள்ளன.
அக்டோபர் மாதத்தில் 27.28 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான 2,070 கோடி யு.பி.ஐ., பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், பரிவர்த்தனை எண்ணிக்கை ஐந்து சதவீதமும்; மதிப்பு 10 சதவீதமும் அதிகரித்து உள்ளன.
இதற்கு முன்னதாக, எண்ணிக்கை அடிப்படையில் கடந்த ஆகஸ்டில் மேற்கொள்ளப்பட்ட 2,000 கோடி யு.பி.ஐ., பரிவர்த்தனைகளும்; மதிப்பு அடிப்படையில் கடந்த மே மாதம் மேற்கொள்ளப்பட்ட 25.14 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான யு.பி.ஐ., பரிவர்த்தனைகளுமே அதிகபட்சமாக இருந்தன.

