UPDATED : அக் 24, 2026 12:00 AM
ADDED : அக் 23, 2026 10:44 PM

புதுடில்லி: கடந்த ஏப்., முதல் செப்., வரை யூரியா இறக்குமதி கடந்தாண்டை விட 40.50 சதவீதம் உயர்ந்து கிட்டத்தட்ட 56 லட்சம் டன்னாக உள்ளது என இந்திய உர சங்கம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அச்சங்கத்தின் தரவுகள்:
மேற்காசிய போர் காரணமாக சரக்கு போக்குவரத்து தடைபட்டதால், நாட்டின் யூரியா இறக்குமதி கடுமையாக பாதிக்கப்பட்டது. குறிப்பாக, கடந்த ஏப்., மாதம் 5.83 லட்சம் டன் யூரியா மட்டுமே இறக் குமதி செய்யப்பட்டது.
நாட்டின் வேளாண் பொருட்கள் உற்பத்தியில் யூரியா முக்கிய இடுபொருளாக இருப்பதால் இறக்குமதியை அதிகரிக்கும் தொடர் முயற்சியின் விளைவாக, ஜூலையில் இறக்குமதி 15 லட்சம் டன்னாக உயர்ந்தது.
இந்நிலையில், நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் மொத்தமாக 55.89 லட்சம் டன் யூரியா இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டின் இதே காலத்தில் இறக்குமதியான 39.79 லட்சம் டன்னுடன் ஒப்பிடுகையில் இது 40.50 சதவீதம் அதிகம் ஆ கும். அதேநேரம், உள்நாட்டு யூரியா உற்பத்தியும் 4 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால் காரீப் பருவத்தில் யூரியா பற்றாக்குறை ஏற்படாமல் இருந்தது.
பருவமழை பற்றாக்குறையால் உர வகைகளின் விற்பனை 4.10 சதவீதம் அதாவது 1.80 கோடி டன் குறைந்துள்ளது.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
