sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மார்ச் 04, 2026 ,மாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

 விரைவாக மாசு கட்டுப்பாட்டு அனுமதி: சிறு, குறு நிறுவனங்கள் வலியுறுத்தல்

/

 விரைவாக மாசு கட்டுப்பாட்டு அனுமதி: சிறு, குறு நிறுவனங்கள் வலியுறுத்தல்

 விரைவாக மாசு கட்டுப்பாட்டு அனுமதி: சிறு, குறு நிறுவனங்கள் வலியுறுத்தல்

 விரைவாக மாசு கட்டுப்பாட்டு அனுமதி: சிறு, குறு நிறுவனங்கள் வலியுறுத்தல்


ADDED : ஜன 25, 2026 01:28 AM

Google News

ADDED : ஜன 25, 2026 01:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:தமிழகத்தில் புதிய தொழில் துவங்க, மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் சிறு மற்றும் குறுந்தொழில்களுக்கு ஒரே அனுமதி அளிக்கவும், இயந்திரங்கள் மீதான முதலீட்டு மதிப்பு அடிப்படையில், கட்டணம் வசூலிக்கவும் நடவடிக்கை எடுக்குமாறு அரசுக்கு, தொழில்முனைவோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் தொழிற்சாலைகள் மாசு குறியீட்டின் அடிப்படையில் சிவப்பு, ஆரஞ்சு, பச்சை, வெள்ளை என, வகைப்படுத்தப்பட்டு உள்ளன.

சிவப்பு பிரிவில் உள்ள ஆலைகள் அதிக மாசுபடுத்துவதாகவும், ஆரஞ்சு பிரிவு ஆலைகள் நடுத்தர மாசு, பச்சை பிரிவு ஆலைகள் குறைவான மாசு, வெள்ளை பிரிவு ஆலைகள் மிக குறைவான மாசுபடுத்துவதாகவும் வகைப்படுத்தப்பட்டு உள்ளன.

ஒரு தொழிலை துவக்குவதற்கு, மாசு கட்டுப்பாட்டு வாரியம், இரண்டு அனுமதிகளை அளிக்கிறது. அதன்படி, தொழிலை துவக்கும் முன் நிறுவுவதற்கான அனுமதியும், அந்த அனுமதிக்கு ஏற்ப ஆலை அமைத்திருப்பதை உறுதி செய்ய இயக்குதலுக்கான அனுமதியும் அளிக்கப்படுகின்றன.

எனவே, சிறு, குறுந்தொழில்களுக்கு ஒரே அனுமதி அளிக்குமாறு அரசுக்கு, தொழில்முனைவோர் கோரிக்கை விடுத்து ள்ளனர்.

'கட்டண குறைப்பு தேவை' இதுகுறித்து, தமிழக சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்க தலைவர் வாசுதேவன் கூறியதாவது: காற்று மாசு அனுமதி, தண்ணீர் மாசு அனுமதிக்கு, மாசு கட்டுப்பாட்டு வாரியம் கட்டணங்களை வசூலிக்கிறது. இந்த கட்டணங்கள் ஆலையில் இயந்திரங்கள் மீதான முதலீட்டு மதிப்பின் அடிப்படையில் மட்டுமே வசூலிக்க வேண்டும். ஆனால் நிலம், கட்டடம், இயந்திரங்கள் என, ஒட்டுமொத்தமாக முதலீட்டை சேர்த்து, ஒரு லட்சம் ரூபாய்க்கு, 300 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது. இது, சிறு நிறுவனங்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது. மேலும், புதிய தொழில் துவங்க, தொழில் துவங்கும் முன் ஒரு அனுமதி, பின் தொழிலை இயக்க அனுமதி என, இரண்டு அனுமதி பெற வேண்டியுள்ளது. இவை, பெரிய நிறுவனங்களுக்குத்தான் பொருந்தும். இவ்வாறு அவர் கூறினார்.








      Dinamalar
      Follow us