ADDED : ஆக 01, 2025 01:37 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் தாமிரத்துக்கு, இன்று முதல் 50 சதவீத வரி விதிக்கப்படும் என, வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
தேசிய பாதுகாப்பு காரணங்கை சுட்டிக்காட்டி, 'செமி பினிஷ்டு' எனப்படும் முற்று பெறாத தாமிரம் மற்றும் தாமிரம் சார்ந்த பொருட்களின் இறக்குமதிக்கு 50 சதவீத வரி விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து நாடுகளுக்கும் ஒரே அளவிலான வரி விதிக்கப்பட்டுள்ளதால், இந்த முடிவால் இந்தியாவுக்கு பெரிய பாதிப்பு இருக்காது என ஜி.டி.ஆர்.ஐ., எனும் உலக வர்த்தக ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்தியாவின் தாமிர ஏற்றுமதி குறைவு தான் என்பதால், பெரிய தாக்கம் இருக்காது என கூறப்படுகிறது.