ADDED : ஆக 01, 2025 01:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:கல்வி நிறுவனங்களில், மாணவர்களின் கண்டுபிடிப்புக்கு உரிமம் பெற்று, அதை வணிக ரீதியாக கொண்டு வர, சென்னை ஸ்டார்ட் அப் டி.என்., அலுவலகத்தில், தொழில்நுட்ப பரிமாற்ற மையம் அமைக்க தமிழக அரசு 50 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது.
தமிழகத்தில் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பல்வேறு தொழில்நுட்பங்களை கண்டுபிடித்து வருகின்றனர். பலர், அவற்றை சந்தைப்படுத்தாமல் விட்டு விடுகின்றனர்.
இதனால், கல்வி நிறுவனங்கள், தொழில் துறை மற்றும் தொழில்முனைவோரை இணைக்க, 50 லட்சம் ரூபாயில் ஸ்டார்ட் அட் டி.என்., அலுவலகத்தில் தொழில்நுட்ப பரிமாற்ற மையம் அமைக்கப்பட உள்ளது.
இது, கல்வி நிறுவனங்களில் கண்டுபிடிக்கப்படும் தொழில்நுட்பங்களுக்கு உரிமம் பெற்று, அதை வணிக ரீதியாக சந்தைப்படுத்த உதவும்.