அமெரிக்காவின் இயற்கை எரிவாயு கட்டுப்பாடு இந்தியாவை பாதிக்காது
அமெரிக்காவின் இயற்கை எரிவாயு கட்டுப்பாடு இந்தியாவை பாதிக்காது
ADDED : ஜன 31, 2024 12:41 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அமெரிக்காவின் இயற்கை எரிவாயு கட்டுப்பாடு இந்தியாவை பாதிக்காது
இயற்கை எரிவாயு ஏற்றுமதிக்கான அனுமதி வழங்கலை அமெரிக்கா நிறுத்தி வைத்துள்ளதால், இந்தியா உடனடியாக பாதிக்கப்படாது என, மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவுடன் தாராள வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ளாத நாடுகளுக்கு, இயற்கை எரிவாயு ஏற்றுமதியை அந்நாடு நிறுத்திவைத்துள்ளது.
இந்நிலையில் அதன் முடிவு, குறுகிய காலத்திலிருந்து நடுத்தர கால காலத்தில், இந்தியாவின் இயற்கை எரிவாயு வினியோகத்தை பாதிக்காது என்று அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தியா, அதன் அதிகபட்ச இயற்கை எரிவாயு இறக்குமதியை, கத்தார் நாட்டிலிருந்தே மேற்கொள்கிறது. அமெரிக்கா மூன்றாவது இடத்தில் உள்ளது.