தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/அமெரிக்காவுக்கு ‘பதிலடி’ வரி வர்த்தக சபை வலியுறுத்தல்

அமெரிக்காவுக்கு ‘பதிலடி’ வரி வர்த்தக சபை வலியுறுத்தல்

அமெரிக்காவுக்கு ‘பதிலடி’ வரி வர்த்தக சபை வலியுறுத்தல்


UPDATED : நவ 27, 2026 12:00 AM

ADDED : நவ 26, 2026 11:10 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 27, 2026 12:00 AM ADDED : நவ 26, 2026 11:10 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: இந்திய பொருட் களுக்கு அமெரிக்கா 25 சதவீத இறக்குமதி வரி விதித்தால், பதிலுக்கு அமெரிக்க பொருட்கள் மீது இந்தியாவும் 25 சதவீத வரி விதிக்க வேண்டும் என ‘சி.டி.ஐ.,’ எனப்படும் வர்த்தக தொழில் சபை தலைவர் பிரிஜேஷ் கோயல் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:

அமெரிக்காவின் புதிய வரி விதிப்பு திட்டத்தால் மருந்துகள், மின்னணு சாதனங்கள், கடல் உணவுகள், ரத்தினம் மற்றும் ஆபரணங்கள், தோல் பொருட்கள், வாகன உதிரிபாகங்கள் உள்ளிட்ட துறைகள் கடுமையாக பாதிக்கப்படும். இதனால் 4.46 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான இந்திய ஏற்றுமதி பாதிக்கப்படுவதுடன், 5 லட்சம் பேரின் வேலைவாய்ப்புக்கும் ஆபத்து ஏற்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அமெரிக்காவிலேயே எதிர்ப்பு


இந்தியா உள்ளிட்ட 14 நாடுகள் மீது புதிய இறக்குமதி வரி விதிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகம் பரிந்துரைத்துள்ளதற்கு அமெரிக்க நாடாளுமன்ற ஆசிய பசிபிக் குழுவின் தலைவரும் எம்.பி.,யுமான கிரேஸ் மெங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், ‘‘அதிபர் டிரம்பின் இந்த பொறுப்பற்ற நடவடிக்கையால், 30 லட்சம் சிறு வணிகங்கள் முடங்கியுள்ளன. அடுத்த ஆண்டு ஜனநாயக கட்சி அதிகாரத்தை கைப்பற்றியதும், கூடுதல் வரிகளை நிரந்தரமாக ரத்து செய்வோம்’’ என்றார்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us