ADDED : ஏப் 24, 2025 12:27 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஐ.ஐ.டி., டெல்லியில் உருவான 'பாட்லேப் டைனமிக்ஸ்' என்ற ஸ்டார்ட் அப் நிறுவனத்தின், ராணுவ ட்ரோன் பிரிவான 'வாயுத்' நிறுவனம், நிதி திரட்டல் சுற்றில், 85 கோடி ரூபாய் முதலீடு பெற்றுள்ளது. ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உற்பத்தி கட்டமைப்புகள் உள்ளிட்டவற்றுக்கு இந்த முதலிட்டை பயன்படுத்த உள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ராணுவ கண்காணிப்பு, உளவு வேலைகளை செய்வது, கூட்டமாக தாக்குவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும் சிறிய வகை ட்ரோன்களை இந்நிறுவனம் உள்நாட்டில் உற்பத்தி செய்கிறது.