சிறுதொழில் தயாரிப்புகளை விற்க மதுரையில் விற்பனையாளர் சந்திப்பு
சிறுதொழில் தயாரிப்புகளை விற்க மதுரையில் விற்பனையாளர் சந்திப்பு
UPDATED : நவ 22, 2025 12:24 AM
ADDED : நவ 22, 2025 12:20 AM

சென்னை:சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள், 'இஸ்ரோ' உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களுக்கு பொருட்களை விற்பதற்கு உதவ விற்பனையாளர் சந்திப்பு நிகழ்ச்சியை, தமிழக அரசின் பேம் டி.என்., நிறுவனம் வரும் 28ம் தேதி மதுரையில் நடத்த உள்ளது.
தமிழகத்தில் உள்ள சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் வாகன உதிரிபாகங்கள், எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் , விண்வெளி துறைக்கான பாகங்கள் உட்பட பல்வேறு பொருட்களை உற்பத் தி செய்கின்றன.
பல நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு, மத் திய, மாநில அரசுகளின் பொதுத்துறை நிறுவனங்களிடம் தேவை இருந்தாலும், எப்படி விற்பது என தெரியாமல் எம்.எஸ்.எம் .இ.,க்கள் சிரமப்படுகின்றன.
எனவே, 'இஸ்ரோ' எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு மையம், கூடங்குளம் அணுமின் நிலையம், திருச்சி படைக்கல தொழிற்சாலை, என்.எல்.சி., எனப்படும் நெய்வேலி நிலக்கரி நிறுவனம், துாத்துக்குடி வ.உ.சி., துறைமுகம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களுக்கு பொருட்களை விற்க, விற்பனையாளர் சந்திப்பு நிகழ்ச்சியை, தமிழக சிறு, குறு, நடுத்தர தொழில் துறையின், 'பேம் டி.என்' நிறுவனம் வரும் 28ம் தேதி மதுரையில் நடத்த உள்ளது.
இந்நிகழ்ச்சி, மதுரை அம்பேத்கர் சாலையில் உள்ள, 'மடிட்சியா' கட்டடத்தில் நடக்கிறது. கூட்டத்தில் தங்களுக்கு தேவைப்படும் பொருட்களின் விபரங்களை, சிறு, குறு நிறுவனங்களிடம், பொதுத்துறை நிறுவனங்கள் தெரிவிக்கும். மேலும், பொருட்களை விற்க, 'ஜெம் போர்டலில்' பதிவு செய்வதற்கான வழிமுறைகள் உள்ளிட்ட விபரங்களும் விரிவாக தெரிவிக்கப்படும்.
விற்பனையாளர் சந்திப்பில் பங்கேற்க விரும்புவோர், 'https://go.fametn.com/vdpnov2025' தளத்தில் பதிவு செய்ய வேண்டும்

