sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 05, 2026 ,மாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

விருதுநகர் ஜவுளி பூங்கா 190 ஏக்கர் ஒதுக்கீடு

/

விருதுநகர் ஜவுளி பூங்கா 190 ஏக்கர் ஒதுக்கீடு

விருதுநகர் ஜவுளி பூங்கா 190 ஏக்கர் ஒதுக்கீடு

விருதுநகர் ஜவுளி பூங்கா 190 ஏக்கர் ஒதுக்கீடு


ADDED : மார் 01, 2026 01:12 AM

Google News

ADDED : மார் 01, 2026 01:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:விருதுநகர் மாவட்டம், இ.குமாரலிங்கபுரத்தில், 1,052 ஏக்கரில், 'பி.எம்.மித்ரா' எனப்படும் பிரதமரின் மாபெரும் ஒருங்கிணைந்த ஜவுளி பூங்காவை, 'சிப்காட்' எனப்படும் தமிழக தொழில் முன்னேற்ற நிறு வனம் அமைக்கிறது.

இந்த பூங்கா மத்திய அரசின் நிதியுதவியுடன், 1,894 கோடி ரூபாய் செலவில், பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகளுடன் உருவாக்கப்பட உள்ளது.

இந்த பூங்காவுக்கான இயக்குநர்கள் குழு கூட்டம், நேற்று முன்தினம், ஜவுளி அமைச்சக செயலர் நீலம் ஷமி ராவ் தலைமையில் நடந்தது. இதில், தமிழக தொழில் துறை செயலர் அருண்ராய், 'சிப்காட்' மேலாண் இயக்குநர் செந்தில்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இக்குழு, 2,131 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்க்கும் வகையில், 23 முதலீட்டாளர்களுக்கு, 190.44 ஏக்கர் நிலத்தை ஒதுக்கீடு செய்துள்ளது.

இதன் வாயிலாக, 15,000 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். நுால் உற்பத்தி, துணி உற்பத்தி, ஆடை உற்பத்தி, தொழில்நுட்ப ஜவுளி உள்ளிட்ட பல்வேறு முதலீடுகளை உள்ளடக்கியதாக, இந்த முதலீடுகள் அமைகின்றன.






      Dinamalar
      Follow us