மார்ச்சில் அதிகரிக்கும் வெப்பத்தால் கோதுமை விளைச்சல் பாதிக்கப்படும்
மார்ச்சில் அதிகரிக்கும் வெப்பத்தால் கோதுமை விளைச்சல் பாதிக்கப்படும்
ADDED : மார் 01, 2026 01:14 AM

புதுடில்லி: மார்ச் மாதத்தில் அதிகளவிலான வெப்பம் பதிவாகும் எனவும், இதனால் கோதுமை விளைச்சல் பாதிக்கப்படும் எனவும் வானிலை ஆய்வு மைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து வெளியான தகவல்:
கோதுமை உற்பத்தியில், உலகளவில் இரண்டாவது இடத்தில் உள்ளது நம்நாடு. வரும் மார்ச் மாதத்தில், கோதுமை தானியங்கள் முழுமையான வளர்ச்சியை எட்டும் நேரத்தில், அதிகபட்ச வெப்பநிலை பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், கோதுமையின் வளர்ச்சி பாதிக்கப்படுவதோடு, எதிர்பார்க்கும் விளைச்சலும் குறையும்.
வட மற்றும் வடமேற்கு மாநிலங்களில் இந்த அதிகளவிலான வெப்பநிலை பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, சராசரி வெப்பநிலையைவிட, 7 டிகிரி செல்சியஸ் கூடுதலாக பதிவாகும். ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேசம் மற்றும் மத்திய பிரதேசத்தின் சில பகுதிகள் பாதிக்கப்படும்.
இந்த மாநிலங்களில் தான் நாட்டின் 80 சதவீத கோதுமை விளைவிக்கப்படுகிறது. இதனால், கோதுமை விளைச்சல் பாதிக்கப்படும். கோதுமையோடு 'ராப்சீடு' அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. அதன் விளைச்சலும் பாதிக்கப்படும். இதுசம்பந்தமான அதிகாரப்பூர்வ அறிக்கையை, இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

