தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/ செப்., 17 முதல் 'விஸ்வகர்மா 2.0' திட்டம்

 செப்., 17 முதல் 'விஸ்வகர்மா 2.0' திட்டம்

 செப்., 17 முதல் 'விஸ்வகர்மா 2.0' திட்டம்


ADDED : ஆக 16, 2026 02:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 16, 2026 02:57 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: பாரம்பரிய கைவினைஞர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு கடன் வசதியை அதிகரித்து, சந்தை இணைப்பை மேம்படுத்தும் நோக்கில் செயல்படுத்தப்படும், 'பிரதமரின் விஸ்வகர்மா' திட்டத்தின் இரண்டாம் கட்டம் வரும் செப்., 17ல் தொடங்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இத்திட்டத்தின் கீழ், அடமானமில்லா கடன், திறன் பயிற்சி, நவீன கருவிகள், டிஜிட்டல் பரிவர்த்தனை ஊக்கத்தொகை மற்றும் சந்தை இணைப்பு ஆதரவு வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை விரிவுபடுத்த மத்திய அரசு தயாராகி வருகிறது.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், 'விஸ்வகர்மா இரண்டாம் கட்டத்தில் பயனாளிகளுக்கு அதிக கடன் வழங்க திட்டமிடப் பட்டுள்ளது.

'ஒரு லட்சம் ரூபாய் வரை வழங்கப்பட்ட கடன், இரண்டாம் கட் டத்தில் 2 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும்' என தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us