தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/ ஜவுளி, ஆடை ஏற்றுமதி 1.84 சதவீதம் சரிவு

 ஜவுளி, ஆடை ஏற்றுமதி 1.84 சதவீதம் சரிவு

 ஜவுளி, ஆடை ஏற்றுமதி 1.84 சதவீதம் சரிவு


ADDED : ஆக 16, 2026 03:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 16, 2026 03:04 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: இந்தியாவின் ஜவுளி மற்றும் ஆடை ஏற்றுமதி, நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலகட்டத்தில், 1.84 சதவீதம் குறைந்து, கிட்டத்தட்ட 1.14 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.

கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில், இது 1.16 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. ஆடை ஏற்றுமதியில் ஏற்பட்ட வீழ்ச்சி, ஒட்டுமொத்த ஜவுளி ஏற்றுமதியில் சரிவை ஏற்படுத்தியதாக, இந்திய ஜவுளி தொழில் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஏப்ரல் - ஜூலை காலகட்டத்தில் ஆடை ஏற்றுமதி 10.52 சதவீதம் குறைந்து, கிட்டத்தட்ட 472 கோடி ரூபாயாக உள்ளது.

அதே நேரத்தில், ஜவுளி ஏற்றுமதி 5.38 சதவீதம் அதிகரித்து, 66,910 கோடி ரூபாயாக உள்ளது.

ஜூலை மாதத்தில் மட்டும், ஜவுளி மற்றும் ஆடை ஏற்றுமதி 1.44 சதவீதம் வளர்ச்சி கண்டு, 29,971 கோடி ரூபாயாக இருந்தது.

இதில், ஜவுளி ஏற்றுமதி 5.94 சதவீதம் அதிகரித்து, 17,849 கோடி ரூபாயாக இருந்தது. ஆடை ஏற்றுமதி 4.48 சதவீதம் குறைந்து, 12,217 கோடி ரூபாயாக உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us