ADDED : ஜூன் 13, 2025 12:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:அலுவலக இட வணிகத்தில் ஈடுபட்டு வரும் வீவொர்க் இந்தியா நிறுவனம், சென்னை மற்றும் புனே நகரங்களில், மேலும் இரண்டு இடங்களை குத்தகைக்கு எடுத்துள்ளது.
இதன் வாயிலாக, நிறுவனத்தின் வணிகம் மேலும் 2 லட்சம் சதுர அடி விரிவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை ராமானுஜம் ஐ.டி., சிட்டியில் அமைந்துள்ள புதிய அலுவலகம், நடப்பாண்டுக்குள் செயல்பாட்டுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.