sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

மத்திய கிழக்கு மோதல் முதலீடுகள் மீது தாக்கம் என்ன?

/

மத்திய கிழக்கு மோதல் முதலீடுகள் மீது தாக்கம் என்ன?

மத்திய கிழக்கு மோதல் முதலீடுகள் மீது தாக்கம் என்ன?

மத்திய கிழக்கு மோதல் முதலீடுகள் மீது தாக்கம் என்ன?


ADDED : அக் 07, 2024 12:17 AM

Google News

ADDED : அக் 07, 2024 12:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இஸ்ரேல் - ஈரான் மோதலால் மத்திய கிழக்கில் அதிகரித்திருக்கும் மோதலுக்கு மத்தியில் முதலீடுகள் தொடர்பாக ஒரு கண்ணோட்டம்.

மத்திய கிழக்கில் அதிகரித்திருக்கும் பதற்றம், சர்வதேச நெருக்கடியில் புதிய பரிமாணத்தை கொண்டு வந்துள்ளது. ஏற்கனவே, உக்ரைன் -- ரஷ்யா இடையிலான தொடரும் போரால் உலக பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இஸ்ரேல்- - ஈரான் மோதலால் மத்திய கிழக்கு பிரச்னை மேலும் தீவிரமாகியிருப்பது, புவிசார் அரசியலில் அதிர்வுகளை உண்டாக்குவதோடு, முதலீடுகள் மீதும் தாக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பின்னணியில் முதலீட்டாளர்கள் பின்பற்ற வேண்டிய உத்திகள் பற்றி ஒரு அலசல்.

இந்திய முதலீடு


சர்வதேச அளவில் அதிகரித்திருக்கும் பதற்றம், பங்கு சந்தை, தங்கம், மியூச்சுவல் பண்ட் உள்ளிட்ட முதலீடுகள் மீது தாக்கம் செலுத்தும் வாய்ப்புள்ளது. பங்கு சந்தையை பொருத்தவரை, வெளிநாட்டு நிதி கழக முதலீட்டாளர்கள் கடந்த மாதம் 4,000 கோடிக்கு மேல் பங்குகளை விற்றுள்ளனர்.

அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி விகித குறைப்பு மற்றும் சீனா அரசால் அறிவிக்கப்பட்டுள்ள பொருளாதார ஊக்க திட்டம், வெளிநாட்டு நிதி கழக முதலீட்டாளர்கள் மீது தாக்கம் செலுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே நேரத்தில், உள்நாட்டு நிதி கழக முதலீட்டாளர்கள் இந்திய சந்தையில் 5,000 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்துள்ளதை வல்லுனர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

சர்வதேச நெருக்கடியை மீறி இந்திய சந்தை உறுதியான தன்மையை வெளிப்படுத்தி வருவதாகவும் கருதப்படுகிறது. மியூச்சுவல் பண்ட் துறையில் எஸ்.ஐ.பி., வாயிலான முதலீடு கடந்த மாதம் சீராக அமைந்துள்ளது. முதலீட்டாளர்கள் நீண்ட கால அணுகுமுறையை கொண்டிருப்பதன் அடையாளமாக இது பார்க்கப்படுகிறது.

எனினும், மத்திய கிழக்கு மோதல் தீவிரமாவது கச்சா எண்ணெய் விலையை மேலும் அதிகரிப்பது பொருளாதாரத்தின் மீது பாதிப்பை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது. இது பங்கு சந்தையிலும் பிரதிபலிக்கலாம்.

பரவலாக்கம் தேவை


தங்கத்தை பொருத்தவரை, சர்வதேச நெருக்கடிக்கு மத்தியில் பாதுகாப்பான சொத்தாக தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய வங்கிகள் தங்கத்தை வாங்கும் உத்தியை பின்பற்றும் என்பதால், அதன் விலை ஏறுமுகமாக அமையலாம். வட்டி விகித போக்கும் தாக்கம் செலுத்தும்.

இந்த சூழலில் பாதுகாப்பு நோக்கில் தங்கத்தில் முதலீடு செய்யலாம் என்கின்றனர். தங்க சேமிப்பு பத்திரம் ஏற்ற தேர்வாக அமையும். புதிய தங்க பத்திரங்கள் வெளியீடு தொடர்பாக தெளிவான தகவல்கள் இல்லாத நிலையில், இரண்டாம் நிலை சந்தையில் தங்க சேமிப்பு பத்திரங்களின் பரிவர்த்தனை அதிகரித்திருக்கிறது.

இந்த பின்னணியில் முதலீட்டாளர்கள், உடனடி மாற்றங்களை மேற்கொள்வதைவிட, பரவலாக்கம் உத்தியை பின்பற்றுவது ஏற்றதாக இருக்கும் என வல்லுனர்கள் கருதுகின்றனர். சமபங்கு, கடன்சார் முதலீடு, தங்கம் என சமச்சீரான முதலீடு தொகுப்பை பெற்றிருப்பது நல்லது.

எனவே, முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடு தொகுப்பில், மாற்றம் தேவையா என பரிசீலித்து, நிதி இலக்குகளுக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கலாம். அச்சத்தில் முதலீடுகளை விற்று வெளியேறுவதை தவிர்க்க வேண்டும்.

நீண்ட கால பார்வையில் அதிரடி மாற்றங்கள் தேவை இல்லை. முதலீட்டாளர்கள் தங்கள் இடர்தன்மைக்கு ஏற்ப முதலீடு தொகுப்பை அணுகுவது பொருத்தமாக இருக்கும்.






      Dinamalar
      Follow us