ADDED : அக் 21, 2024 03:50 AM

இட்லி தோசை மாவு வரி நீக்க வேண்டும்
மாணவர்கள் பயன்படுத்தும் நோட்டுப்புத்தகங்கள் , எழுதுபொருட்கள் கல்விக்கன மற்ற உபகரணங்களுக்கு முழு வரி விலக்கு அளிக்க வேண்டும். பல பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் 18 மற்றும் 24 சதவீத உயர் வரிவிகிதம் 12 சதவீதமாக குறைக்கப்பட வேண்டும். அதிகபட்ச வரியே 12 சதவீதம் தான் இருக்க வேண்டும்.
பூஜைக்கு பயன்படத்தும் பொருட்கள் மீதான வரியை ரத்து செய்து முழு விலக்கு அளிக்க வேண்டும். பெண்கள் பிரத்யேகமாக பயன்படுத்தும் இன்றியமையாத பொருட்கள்,முழு வரி விலக்கின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும்.
அரிசி பருப்பு, கோதுமை, வெல்லம், கருப்பட்டி, போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கு எத்தனை கிலோ ' பேக்கிங் ' ஆக இருந்தாலும் வரி விதிக்க கூடாது. இட்லிமாவு, தோசை மாவு ரஸ்க் போன்ற பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட வேண்டும்.
மாதம் தோறும் 11 மற்றும் 20 ம் தேதி ஜி.எஸ்.டி. படிவங்களை தாக்கல் செய்யப்படுகிறது. இதனை ஜி.எஸ்.டி. ஆர்., 1 க்கு 15 ம் தேதியாகவும், ஜி.எஸ்.டி.ஆர் 3 பிக்கு 25 ம் தேதியாகவும் மாற்ற வேண்டும்.
பிராந்திய மொழிக்கு அறிமுகம் இல்லாதவர்களை ஜி.எஸ்.டி., அலுவலகங்களில் பணியமர்த்த கூடாது. வரி செலுத்துவோர் தங்கள் குறைகள் அல்லது விளக்கங்களை கேட்டுப்பெறுவது மிகச்சிரமமாக உள்ளது.
டி.கிருபாகரன்
தலைவர், திண்டுக்கல் மாவட்ட தொழில் வர்த்தக சஙகம்,
ஜி.எஸ்.டி., நடைமுறையில் நீங்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள், எதிர்பார்ப்பு, தீர்வு என எதுவாயினும் உங்களின் கருத்துகளை எங்களுக்கு அனுப்புங்கள். 'தினமலர்' நாளிதழில் வெளியாகி மத்திய, மாநில அரசுகளின் கவனத்தைப் பெறும். அனுப்புவோரின் விவரங்கள் அவர்கள் விரும்பினால் மட்டுமே வெளியிடப்படும்.
முகவரி
ஜி.எஸ்.டி., - தீர்வைத் தேடி!
தினமலர், டி.வி.ஆர்., ஹவுஸ்,
சுந்தராபுரம்,கோவை - 641 024.