ADDED : மார் 26, 2025 10:57 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:மத்திய அரசு வரும் ஏப்ரல் 1 முதல், வாராந்திர கோதுமை இருப்பு அறிக்கை தாக்கல் செய்வதை கட்டாயமாக்கியுள்ளது. அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த வியாபாரிகள், மொத்த விற்பனையாளர்கள், சில்லரை விற்பனையாளர்கள் மற்றும் பதப்படுத்துபவர்களும் இதை பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தையில் யூக வணிகம், பதுக்கல் ஆகியவற்றை கட்டுப்படுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, அனைத்து நிறுவனங்களும், மத்திய அரசின் ஆன்லைன் போர்ட்டலில், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தங்களின் கோதுமை இருப்பு நிலைகளை அறிவிக்க வேண்டியது கட்டாயமாகும்.