'தமிழக ஸ்டார்ட் அப் குறித்த வெள்ளை அறிக்கை தேவை' 'ஸ்டார்ப் அப்' ஆலோசகர் வலியுறுத்தல்
'தமிழக ஸ்டார்ட் அப் குறித்த வெள்ளை அறிக்கை தேவை' 'ஸ்டார்ப் அப்' ஆலோசகர் வலியுறுத்தல்
ADDED : டிச 25, 2024 01:21 AM

திருப்பூர்:''ஸ்டார்ட் அப் தமிழ்நாடு திட்ட செயல்பாடு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்,'' என, 'ஸ்டார்ட் அப் இந்தியா' ஆலோசகர் ஜெயபிரகாஷ் வலியுறுத்தியுள்ளார்.
அவர் இது குறித்து கூறியதாவது:
தமிழகத்தில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் எண்ணிக்கை, நான்கு மடங்காக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். கடந்த 2021ல் 2,300 நிறுவனங்கள் மட்டுமே இருந்த நிலையில், மூன்று ஆண்டுகளில் 10,005 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
ஆனால், ஒவ்வொரு மாவட்டம் வாரியாக துவங்கப்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் விபரம், அவற்றின் பெயர் பட்டியல் உள்ளிட்ட தகவல்கள் முழுமையாக வெளியிடப்படவில்லை; இணையதளத்திலும் பதிவாகவில்லை. மேலும், சிலர் பெயர் அளவுக்கு பதிவு செய்கின்றனர்; ஆனால் தொழில் துவங்குவதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.
இந்நிலையில், ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் செயல்பாடு குறித்து முழுமையான விபரங்களை வெளியிடுவது, தொழில் முனைவோரை ஊக்குவிப்பதாக இருக்கும். எனவே ஸ்டார்ட் அப் தமிழ்நாடு திட்டத்தில், மாவட்டம் வாரியாக துவங்கியுள்ள தொழில்கள் குறித்த பட்டியலுடன், வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.