ADDED : டிச 02, 2024 12:42 AM

இந்தியர்களின் கடன் தேர்வில் தங்க நகைக்கடன் முன்னிலை வகிப்பதும், இந்த பிரிவில் கணிசமான வளர்ச்சி இருப்பதும் தெரிய வந்துள்ளது.
ஒருங்கிணைந்த பிரிவில் தங்க நகைக்கடன் வழங்குவது செப்டம்பர் மாதம் 51 சதவீத வளர்ச்சி அடைந்து உள்ளது என்றும், இதே காலத்தில் தனிநபர் கடன் 11 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளது என்றும் ரேட்டிங் அமைப்பான இக்ரா தெரிவிக்கிறது.
தங்க நகைக்கடன் சந்தை இந்த ஆண்டு பத்து லட்சம் கோடி ரூபாயை தொடும் என்றும், 2027 ல் இது 15 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்க நகைக்கடன் பெறுவது வேகமாக இருப்பது, இதன் வளைந்து கொடுக்கும் தன்மை மற்றும் எளிய அணுகல் வசதி இந்த பிரிவின் வளர்ச்சிக்கான காரணமாக கருதப்படுகிறது.
இந்த அம்சங்கள் காரண மாக, தனிநபர் கடன் மற்றும் கிரெடிட் கார்டு கடன்களை விட தங்க நகைக்கடன் அதிகம் நாடப்படுவதாக கருதப்படுகிறது.
தங்கத்தின் மதிப்பு உயர்ந்து வருவதும் நகைக்கடன் அதிகரிப்பதற்கு உதவி வருகிறது. தங்க நகைக்கடன் பிரிவில் பொதுத்துறை வங்கிகள் முன்னிலை வகிக்கின்றன.