தங்க கட்டிகள் இறக்குமதிக்கு அமெரிக்கா வரி விலக்கு?
தங்க கட்டிகள் இறக்குமதிக்கு அமெரிக்கா வரி விலக்கு?
ADDED : ஆக 09, 2025 11:07 PM

சென்னை:தங்க கட்டிகளின் இறக்குமதிக்கு, அமெரிக்கா வரி விலக்கு அளிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கிட்டத்தட்ட அனைத்து நாடுகளுக்கும் அமெரிக்கா பரஸ்பர வரி விதித்துள்ளது. இந்நிலையில், இந்த வரி விதிப்பு பட்டியலில் ஒரு கிலோ தங்க கட்டிகள் மற்றும் 100 அவுன்ஸ் அதாவது 2,835 கிராம் தங்க கட்டிகளும் அடங்கும் என, அமெரிக்க சுங்கத்துறை அறிவித்தது.
இதையடுத்து, இவற்றுக்கு 39 சதவீதம் வரி விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்த தகவல் சர்வதேச தங்க கட்டி சந்தையில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
அமெரிக்காவின் முக்கிய வினியோகஸ்தர்களாக விளங்கும் சுவிட்சர்லாந்து சுத்திகரிப்பாளர்கள், ஏற்றுமதியை நிறுத்தினர். இதனால் தங்க பியூச்சர் கான்ட்ராக்டு கள் ஒரு அவுன்ஸ் கிட்டத்தட்ட 3 லட்சம் ரூபாயாக அதிகரித்தன.
இது தவறான தகவல் என்றும், விரைவில் தெளிவுபடுத்தப்படும் என்றும் வெள்ளை மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டதும் தான், விலை குறைந்தது.