காற்றாலை டர்பைன் தமிழகத்தில் 'சென்வியான்' தயாரிப்பு
காற்றாலை டர்பைன் தமிழகத்தில் 'சென்வியான்' தயாரிப்பு
ADDED : ஏப் 19, 2025 11:27 PM

புதுடில்லி:'சென்வியான் இந்தியா' நிறுவனம், காற்றாலை மின் உற்பத்திக்கு தேவையான 4.20 மெகாவாட் டர்பைன்களை தமிழகத்தில் தயாரிக்க உள்ளதாக, அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அமித் கன்சால் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
சென்வியான் நிறுவனம், இந்தியாவில் இதுவரை பெரும்பாலும் 2.70 மற்றும் 3.10 மெகாவாட் வகையைச் சேர்ந்த டர்பைன்களையே தயாரித்து வழங்கியுள்ளது. இந்நிலையில், ஏற்கனவே, அரை ஜிகாவாட் மின் உற்பத்திக்காக 4.20 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட டர்பைனை தயாரித்து வழங்குவதற்கான ஆர்டர்களை பெற்றுள்ளது.
மேலும், இத்தகைய திறன் கொண்ட டர்பைன்கள் வரும் மாதங்களில் 70 சதவீதம் விற்பனைக்கு வரும் என நிறுவனம் எதிர்பார்க்கிறது.
மேலும், நிறுவனத்தின் டர்பைன் உற்பத்தித் திறன் விரிவாக்கத்திற்காக, தமிழகத்தின் திருச்சியில் உள்ள ஆலை விரிவுபடுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

