காற்றாலை முதலீட்டை ஈர்க்க 'விண்டர்ஜி இந்தியா' மாநாடு
காற்றாலை முதலீட்டை ஈர்க்க 'விண்டர்ஜி இந்தியா' மாநாடு
ADDED : அக் 17, 2024 11:48 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:காற்றாலை திட்டங்களில் முதலீடுகளை ஈர்க்க, இந்திய காற்றாலை மின் சாதன உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில், 'விண்டர்ஜி இந்தியா' என்ற பெயரில் காற்றாலை மின்சார கண்காட்சி மற்றும் மாநாடு, சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், வரும் 23ம் தேதி முதல் 25ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதில், உலகம் முழுதும் இருந்து, காற்றாலை மின் சாதனங்கள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள 300 நிறுவனங்களின் கண்காட்சி அரங்கங்கள் இடம் பெறுகின்றன. மாநாட்டில், காற்றாலைகளில் புதிய தொழில்நுட்பம், முதலீடு உள்ளிட்டவை தொடர்பாக நிறுவனங்களும், முதலீட்டாளர்களும் கலந்தாலோசிக்கலாம்.
இந்தியாவில் காற்றாலை மின் நிலையங்கள் அதிகமுள்ள மாநிலங்களில், குஜராத்துக்கு அடுத்து தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது.