ADDED : டிச 20, 2024 11:14 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடத்தில், 'யோட்டா' நிறுவனம், ஹிராநந்தானி குழுமத்துடன் இணைந்து, 3,000 கோடி ரூபாய் முதலீட்டில், 'டேட்டா சென்டர் பார்க்' எனும் தரவு மைய பூங்காவை அமைக்க முடிவு செய்துள்ளது. இதற்காக இந்நிறுவனம் ஏற்கனவே, தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
டேட்டா சென்டர் பார்க் அமைக்கும் பணிகளை, யோட்டா நிறுவனம் விரைவில் துவக்க உள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது. இதன் வாயிலாக, 2,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இந்த டேட்டா சென்டர் பார்க், 200 மெகா வாட் பசுமை மின்சாரத்தை பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட உள்ளது.