தெரு நாயை துரத்தியவரை தாக்கிய வாலிபருக்கு 'காப்பு'
தெரு நாயை துரத்தியவரை தாக்கிய வாலிபருக்கு 'காப்பு'
ADDED : நவ 29, 2025 03:09 AM
சென்னை: மெரினாவில் சாலையில் நடந்து சென்றவர்களை கடிக்க முயன்ற தெரு நாயை துரத்தியவரை, கட்டையால் தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டு, ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
ராயப்பேட்டை, பி.எம்., தர்காவைச் சேர்ந்தவர் ஜெயபால், 30. மெரினாவில் உள்ள துரித உணவகத்தில் நேற்று முன்தினம் இரவு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அவ்வழியாக நடந்து சென்றவர்களை தெரு நாய் ஒன்று கடிக்க முயன்றது. நாயை விரட்டும் விதமாக கட்டையால் ஜெயபால் தாக்கி உள்ளார்.
அவ்வழியாக, தோழியருடன் வந்த வாலிபர் ஆத்திரமடைந்து, ஜெயபால் கையில் வைத்திருந்த கட்டையை பறித்து, அவரை தாக்கி உள்ளார்.
இதில் காயமடைந்த ஜெயபால், மெரினா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். விசாரித்த போலீசார், தாக்குதலில் ஈடுபட்ட பெசன்ட் நகரைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரான ஜசக் நிர்மல் குமார், 25 என்பவரை கைது செய்தனர். பின் ஜாமினில் விடுவித்தனர்.

