ADDED : ஜூன் 06, 2025 12:50 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:ஜெர்மனியைச் சேர்ந்த இசட்.எப்., குழுமம், கட்டுமானம் மற்றும் ரயில்வே துறைக்கான 'ஆக்ஸில், டிரான்ஸ்மிஷன்'களை உற்பத்தி செய்ய, 192 கோடி ரூபாய் முதலீட்டில் கோவையில் புதிய தொழிற்சாலையை அமைத்துள்ளது.
இதுகுறித்து, குழுமத்தின் நிர்வாக குழு உறுப்பினர் பீட்டர் லயர் கூறுகையில், ''கோவையில் புதிய ஆலையை துவக்கி இருக்கிறோம். இசட்.எப்., குழுமத்திற்கு முக்கிய சந்தையாக இந்தியா உள்ளது,'' என்றார்.
இசட்.எப்., குழும தொழிலக தொழில்நுட்ப செயலாக்க துணைத்தலைவர் ஆன்ட்ரீயாஸ் மோசெர் கூறுகையில், ''கட்டுமான தொழில் துறை நேர்மறையான நம்பிக்கையை, உத்வேகத்தை கொண்டிருக்கிறது. கோவையில், 'எர்கோபவர் டிரான்ஸ்மிஷன், மல்ட்டிராக் ஆக்ஸில் சீரிஸ்' தயாரிப்பு, இந்த முன்னேற்றத்திற்கு நல்ல பங்களிப்பை அளிக்கும்,'' என்றார்.