ADDED : டிச 20, 2024 11:28 PM

பெங்களூரு:பெங்களூரைச் சேர்ந்த ஜூம்கார் நிறுவனம், வாடிக்கையாளர்கள் தாங்களே ஓட்டிக்கொள்ளும் வகையில் கார்களை வாடகைக்கு வழங்கி வருகிறது. தற்போது ஓட்டுனருடன் கூடிய கார்களுக்கு தேவை அதிகரித்து வருவதை அடுத்து, 'டாக்சி' சேவையில் குதித்து உள்ளது.
ஏற்கனவே, இந்த சேவையில் ஓலா, ஊபர் நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், தற்போது களமிறங்கி உள்ள ஜூம்கார், 2 மணி நேரம் முதல், ஒரு மாதம் வரை ஓட்டுனருடன் கூடிய கார்களை வாடகைக்கு வழங்க இருப்பதாகவும், வாடிக்கையாளர்கள் செயலி வாயிலாக விருப்பத்திற்குரிய காரை தேர்வு செய்து கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது.
இந்தாண்டு துவக்கத்தில், அதிக சந்தைப்படுத்தல் செலவுகள் மற்றும் நிதிப் பற்றாக்குறை காரணமாக சர்வதேச சந்தையில் இருந்து விடைபெற்றது ஜூம்கார்.
கடனை திருப்பி செலுத்தவும், நடப்பு மூலதன தேவைக்காகவும் தற்போது நிதி திரட்டும் முயற்சியில் உள்ளது.

