sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

ஜி.எஸ்.டி., சந்தேகங்கள்

/

ஜி.எஸ்.டி.,யில் என்ன பிரச்னை

/

ஜி.எஸ்.டி.,யில் என்ன பிரச்னை

ஜி.எஸ்.டி.,யில் என்ன பிரச்னை

ஜி.எஸ்.டி.,யில் என்ன பிரச்னை


ADDED : செப் 16, 2024 01:13 PM

Google News

ADDED : செப் 16, 2024 01:13 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜி.எஸ்.டி.,யில் நிலவும் பிரச்னைகள், குறைபாடுகள், குளறுபடிகள், குற்றச்சாட்டுகள் மற்றும் தீர்வுக்கான யோசனைகள் குறித்து வணிகர்கள் உள்ளிட்ட வரி செலுத்துவோர் எவரும் எழுதலாம் என்ற, 'தினமலர்' அறிவிப்புக்கு நல்ல வரவேற்பு; நுாற்றுக்கணக்கான கடிதங்களை எழுதி குவித்துவிட்டனர். அதன்விவரம், திங்கள் தோறும் 'தினமலர்' இதழில் இப்பகுதியில் வெளியாகும்.

விரைவில் கெட்டுவிடும் பானங்களுக்கு 5 சதவீத வரி போதும் இளநீர் மற்றும் பழரசங்கள் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளேன். இதில், ஒரே பொருளுக்கு மூன்று முறை வரிவிதிக்கப்

படுகிறது. உள்ளீட்டு வரியையும் முழுதாக திருப்பி எடுக்கும் சூழல் இல்லை. இளநீர், பழரச

தயாரிப்பை மூன்று கட்டங்களாக செயல்படுத்துகிறோம்.

முதல்கட்டம்: பழரசங்களை அடைக்க, பிளாஸ்டிக் பாட்டில் பயன்படுத்துகிறோம். பாட்டில் தயாரிக்க, பிளாஸ்டிக் ரெசின் மூலப்பொருளை 18 சதவீத வரியில் வாங்குகிறோம். எங்களுக்கு மூடி (கேப்) விற்பனை செய்வோர், அந்த மூலப்பொருளுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி., செலுத்துகின்றனர்.

இரண்டாம் கட்டம்: ரெசினை குப்பிகளாக வடிவமைத்து மீண்டும் பில் போட்டு, 18 சதவீதம் இரண்டாவது முறையாக வரி வசூலிக்கப்படுகிறது.

மூன்றாவது கட்டம்: முழுமையான பொருள் (பினிஷ்டு புராடக்ட்ஸ்) என, பழரச பானங்களை நிரப்பியதும், அதற்கு 12 சதவீதம் வரி வாடிக்கையாளரிடம் இருந்து பெற்று, ஜி.எஸ்.டி.,யாக

செலுத்துகிறோம். பிளாஸ்டிக் பாட்டில் மூடி 18 சதவீத ஜி.எஸ்.டி., ஒட்டும் லேபிளுக்கு

18 சதவீத ஜி.எஸ்.டி., பிற மாநிலங்களுக்கு லாரிகளில் சரக்கு அனுப்பும்போது, லாரி வாடகைக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி., செலுத்த வேண்டியுள்ளது.

மொத்தத்தில் பழரச குளிர்பானத்தை தயாரிக்க 5 முறை ஜி.எஸ்.டி., செலுத்த வேண்டியுள்ளது. நுகர்வோருக்கு விற்கும்போதும் 12 சதவீத வரி வசூலிக்க வேண்டியுள்ளது. இதனால் பொருளின் விலை அதிகரித்து, நுகர்வோருக்கு சுமை அதிகரிக்கிறது.

உள்ளீட்டு வரி என்பது பேச்சளவில் சரி. மூலப்பொருளை விவசாயிகளிடம் இருந்து வாங்கும்போது, இளநீர், பழங்களுக்கு ஜி.எஸ்.டி., இல்லாததால், உள்ளீட்டு வரியை எடுக்க

இயலவில்லை. எனவே, 18 சதவீதம், 12 சதவீத வரிகளுக்குப் பதிலாக, 5 சதவீத வரியாக வசூலித்தால், வரிச்சுமை குறைந்து, நுகர்வோராகிய மக்களுக்கும் குறைந்த விலையில் பொருளைக் கிடைக்கச் செய்ய முடியும்.

ஜி.எஸ்.டி., அமலாக்கத்துக்கு முன்பாக அதாவது பா.ஜ., மத்தியில் ஆட்சியில் அமர்வதற்கு முன்பாக, விரைவில் கெட்டுப்போகும் இளநீர் மற்றும் பழரசத்துக்கு விற்பனை வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு இருந்தது.

இதனால், வாங்கும் விலையில் பொருள் கிடைத்ததால், அதிகம் விற்பனையாகி, விவசாயிகளும் பயனடைந்தனர். வரியால் விலையுயர்ந்ததால், ஆரோக்கியமான இந்த பானங்களை விட, ரசாயனங்களைப் பயன்படுத்தி குறைந்த விலையில் தயாரிக்கப்படும் குளிர்பானங்கள் 12 சதவீத ஜி.எஸ்.டி.,யில் மக்களால் அதிகம் வாங்கப்படுகிறது.எனவே, இந்த

ஜி.எஸ்.டி., விபத்தில் இருந்து மக்களைக் காக்க, வரியை 5 சதவீதமாகக் குறைக்க வேண்டும்.

ஜி.எஸ்.டி., நடைமுறையில் நீங்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள், எதிர்பார்ப்பு, தீர்வு என

எதுவாயினும் உங்களின் கருத்துகளை எங்களுக்கு அனுப்புங்கள்.

'தினமலர்' நாளிதழில் வெளியாகி மத்திய, மாநில அரசுகளின் கவனத்தைப் பெறும்.

அனுப்புவோரின் விவரங்கள் அவர்கள் விரும்பினால் மட்டுமே வெளியிடப்படும்.

முகவரி: ஜி.எஸ்.டி., - தீர்வைத் தேடி!

தினமலர், டி.வி.ஆர்., ஹவுஸ், சுந்தராபுரம், கோவை - 641024.






      Dinamalar
      Follow us