/
செய்திகள்
/
வர்த்தகம்
/
ஜி.எஸ்.டி., சந்தேகங்கள்
/
ஜி.எஸ்.டி.,யில் என்ன பிரச்னை? (17)
/
ஜி.எஸ்.டி.,யில் என்ன பிரச்னை? (17)
UPDATED : அக் 07, 2024 10:39 AM
ADDED : அக் 07, 2024 08:03 AM

குற்றச்சாட்டுகள் மற்றும் தீர்வுக்கான யோசனைகள் குறித்து வணிகர்கள் உள்ளிட்ட வரி செலுத்துவோர் எவரும் எழுதலாம் என்ற, 'தினமலர்' அறிவிப்புக்கு நல்ல வரவேற்பு; நுாற்றுக்கணக்கான கடிதங்களை எழுதி குவித்துவிட்டனர். அதன்விவரம், 'தினமலர்' இதழில் இப்பகுதியில் வெளியாகும்.
பொருள் வாங்கியவருக்கு தாமதமின்றி ஐ.டி.சி.,!
ஜி.எஸ்.டி., உரிய காலத்தில் செலுத்தாமல், தாமதமாக செலுத்தும் தொழில் முனைவோர்களுக்கு வட்டி மற்றும் அபராதம் அதிக அளவில் விதிக்கப் படுகிறது. இதனால், இதுவரை சரிவர ஜி.எஸ்.டி., செலுத்த முடியாமல் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் தொழில்முனைவோருக்கு, வட்டி மற்றும் அப ராதத் தொகையை தள்ளுபடி செய்து, அவர்கள் செலுத்த வேண்டிய ஜி.எஸ்.டி., தொகையை மட்டும் செலுத்த வாய்ப்பளிக்க வேண்டும். இதனால், அவர்கள் தங்கள் தொழிலைத் தொடர இயலும். ஒரு விற்பனையாளர், ஒரு பொருளை விற் பனை செய்யும்போது, அதற்காக பெறப்பட்ட ஜி.எஸ்.டி., வரியை கணக்கில் காட்டும்போது மட்டுமே, பொருளை வாங்குபவர் அதற்கான உள்ளீட்டு வரியை (ஐ.டி.சி.,) பெற இயலும் என்ற விதி தற்போது நடைமுறையில் உள்ளது.
இதனால், ஒரு பொருளை விற்பனை செய்த வர் அதற்கான ஜி.எஸ்.டி., தொகையை கணக் கில் காண்பிப்பதில் தாமதம் ஏற்படும்போது, பொருளை வாங்கியவர் அதற்கான உள்ளீட்டு வரியை பெற காலதாமதமாகிறது; சில சமயங்களில் கிடைக்காமலேயே போகிறது.
இதனால், பொருளை வாங்கியவர் பாதிக்கப் படும் சூழ்நிலை உண்டாகிறது. எனவே, ஒரு பொருளை விற்பனை செய்தவர் அதற்கான ஜி.எஸ்.டி., வரியைக் கணக்கில் காண்பிக்கா விட்டாலும் கூட, பொருளை வாங்கியவர் அதற் கான உள்ளீட்டு வரியை பெற்றுக் கொள்ளும் வகையில் விதிமுறையில் மாற்றம் செய்யப்பட வேண்டும்.
-ஏ.சிவக்குமார்,
தலைவர், கோவை திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் மற்றும் ஊரகத் தொழில் முனைவோர் சங்கம் (காட்மா).