உள்ளடக்கத்திற்கு செல்ல
என்.எஸ்.இ., பங்கு வெளியீடுக்கு 5.71 மடங்கு விண்ணப்பம்
என்.எஸ்.இ., பங்கு வெளியீடுக்கு 5.71 மடங்கு விண்ணப்பம்
ADDED : செப் 22, 2026 06:34 AM
அ நிறம் | அளவு
'என் .எஸ்.இ.,' ஐ.பி.ஓ., வெளியீட்டின் இறுதி நாளான நேற்று, 5.71 மடங்கு விண்ணப்பங்கள் வந்துள்ளன. மொத்தம் 8.86 கோடி பங்குகள் வெளியிடப்பட்ட நிலையில், 50.58 கோடி பங்குகளுக்கு விண்ணப்பங்கள் வந்துள்ளன.
நிறுவன முதலீட்டாளர்கள், நிறுவனமல்லாத முதலீட்டாளர்கள் ஆகிய இரு பிரிவுகளிலும் அதிகளவில் விண்ணப்பங்கள் வந்துள்ளன. ஆனால், ஒப்பீட்டளவில் சிறு முதலீட்டாளர்கள் பிரிவில் குறைவான விண்ணப்பங்களே (1.39 மடங்கு) வந்துள்ளன.
பிரிவு விண்ணப்பங்கள் (மடங்கு)
தகுதிவாய்ந்த நிறுவன முதலீட்டாளர்கள் 12.68
நிறுவனமல்லாத முதலீட்டாளர்கள் 6.55
சிறு முதலீட்டாளர்கள் 1.39
ஊழியர்கள் 2.40
மொத்தம் 5.71
