தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/3 புதிய பாலிசிகள்: எல்.ஐ.சி., அறிமுகம்

3 புதிய பாலிசிகள்: எல்.ஐ.சி., அறிமுகம்

3 புதிய பாலிசிகள்: எல்.ஐ.சி., அறிமுகம்


UPDATED : அக் 16, 2026 12:00 AM

ADDED : அக் 15, 2026 10:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 16, 2026 12:00 AM ADDED : அக் 15, 2026 10:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

எல்.ஐ.சி., நிறுவனம் வாடிக்கையாளர்களின் பல்வேறு நிதித்தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் ‘நியூ ஜீவன் தாரா - 2, ஹெல்த் ஷீல்டு, நியூ கேன்சர் கவர்’ என்கிற மூன்று புதிய திட்டங்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த மூன்று புதிய திட்டங்களும், வரும் அக்டோபர் 19ம் தேதி முதல் ஆன்லைன் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட இடைத்தரகர்கள் வாயிலாக விற்பனைக்கு வரவுள்ளன. இந்த திட்டங்களில் 18 வயது முதல் 65 வயது வரை உள்ளவர்கள் சேரலாம்.

நியூ ஜீவன் தாரா – 2



ஓய்வுகாலத்தில் உறுதியான வருமானத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இத்திட்டத்தில், தொடக்கத்திலேயே உறுதியான ஓய்வூதிய விகிதங்கள் நிர்ணயிக்கப்படுவதோடு, ஒருமுறை அல்லது தொடர் பிரீமியம் செலுத்தும் வசதிகளும் உள்ளன. நாம் தேர்வு செய்யும் பிரீமியம் முறையை பொறுத்து 1 முதல் 15 ஆண்டுகள் வரை ஒத்திவைப்பு காலம் வழங்கப்படுவதுடன், இக்காலத்தில் கூடுதல் பிரீமியம் செலுத்தி ஓய்வூதிய தொகையை உயர்த்தி கொள்ளும் ‘டாப்-அப்’ வசதியும் இதில் உள்ளது.

ஹெல்த் ஷீல்டு



இத்திட்டம் முழு குடும்பத்திற்கும் விரிவான உடல்நல காப்பீட்டை வழங்குவதோடு, மருத்துவமனை சேர்க்கை, அறுவை சிகிச்சை செலவுகள் மற்றும் அபாயகரமான நோய்களுக்கும் மருத்துவ பாதுகாப்பளிக்கிறது. 90 நாட்கள் பூர்த்தியடைந்த குழந்தைகளுக்கும் பொருந்தும் இத்திட்டத்தின் பாலிசி மற்றும் பிரீமியம் செலுத்தும் காலம் 15 ஆண்டுகளாகும். மேலும், பாலிசி விதிகளின்படி முதன்மை பாலிசிதாரர் இறக்க நேர்ந்தால், மற்ற காப்பீடுதாரர்களுக்கு பிரீமியம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

நியூ கேன்சர் கவர்



புற்றுநோய் நிலைகளுக்கு ஏற்ப உத்தரவாதமான காப்பீட்டை வழங்கும் இத்திட்டத்தில், புற்றுநோய் ஆரம்ப நிலையில் கண்டறியப்பட்டால் காப்பீட்டு தொகையில் 25 சதவீதமும், முதிர்ச்சியான நிலையில் கண்டறியப்பட்டால் 100 சதவீதமும் வழங்கப்படுகிறது. இதன் குறைந்தபட்ச பிரீமியம் செலுத்தும் காலம் 10 முதல் 15 ஆண்டுகள் வரை இருப்பதுடன், வயது மற்றும் தகுதியின் அடிப்படையில் குறைந்தபட்சம் 15 லட்சம் ரூபாய் முதல் அதிகபட்சம் 50 லட்சம் ரூபாய் வரை காப்பீட்டு தொகையை தேர்வு செய்துகொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us