UPDATED : அக் 16, 2026 03:39 AM
ADDED : அக் 15, 2026 10:44 PM

ஐ.டி.பி.ஐ., பேங்க்
பங்கு விலை 9% சரிவு
ஐ. டி.பி.ஐ., வங்கியின் 60.72 சதவீத பங்குகளை, ஒரு பங்கு 81 ரூபாய் என்ற விலைக்கு கனடாவை சேர்ந்த 'பேர்பேக்ஸ்' நிறுவனத்துக்கு விற்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இது நேற்று முன்தின வர்த்தகத்தின் முடிவு விலையான 90 ரூபாயை விட குறைவு என்பதால், நேற்று ஐ.டி.பி.ஐ., பேங்க் பங்கு விலை கிட்டத்தட்ட 9 சதவீதம் இறங்கியது. வர்த்தக முடிவில் 7.68 சதவீத சரிவில் 83.45 ரூபாய்க்கு நிறைவடைந்தது.
'முதலீட்டாளர் எண்ணிக்கை
26 கோடியாக உயரும்'
செ பி தலைவர் துஹின் காந்தா பாண்டே மும்பையில் செய்தியாளர்களிடம் பேசியபோது: மியூச்சுவல் பண்டு முதலீட்டாளர்களின் எண்ணிக்கை தற்போதைய 6.60 கோடியில் இருந்து அடுத்த பத்தாண்டுகளில் 14 - 15 சதவீத ஆண்டு வளர்ச்சி விகிதத்தில் 24 முதல் 26 கோடியாக உயர வாய்ப்புள்ளது.
இவ்வாறு தெரிவித்தார்.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
பங்கு விலை 3% உயர்வு
'ஜி யோ பிளாட்பார்ம்ஸ்' நிறுவனத்தின் ஐ.பி.ஓ., வெளியீட்டில், ஒரு பங்குக்கு 1,065 - 1,119 ரூபாய் விலை வரம்பு வைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வந்ததை தொடர்ந்து, நேற்று வர்த்தகத்தில் ஜியோவின் தாய் நிறுவனமான 'ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்' பங்கு விலை கிட்டத்தட்ட 4 சதவீதம் வரை உயர்ந்தது. வர்த்தக முடிவில் 3.44 சதவீத ஏற்றத்தில் 1,215 ரூபாய்க்கு நிறைவடைந்துள்ளது.
பராஸ் ஹெல்த்கேர்
ஐ.பி.ஓ., விலை ரூ.660 - 693
ம ருத்துவமனைகளை நடத்தி வரும் 'பராஸ் ஹெல்த்கேர்' நிறுவனத்தின் ஐ.பி.ஓ., வெளியீடு அக்டோபர் 21 - 23 தேதிகளில் நடைபெறுகிறது. இந்நிலையில், ஒரு பங்குக்கான விலை வரம்பு 660 - 693 ரூபாய் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 1,450 கோடி ரூபாய் மதிப்புள்ள ஐ.பி.ஓ.,வில் 500 கோடி ரூபாய்க்கு புதிய பங்குகளும், ஓ.எப்.எஸ்., முறையில் 950 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளும் வெளியாகின்றன.
தங்க பத்திரங்களில்
294 சதவீத லாபம்
ரி சர்வ் வங்கி 2019ம் ஆண்டு அக்டோபர் 15ம் தேதி வெளியிட்ட தங்க பத்திரங்களுக்கான முன்கூட்டிய முதிர்வு விலையை, ஒரு கிராமுக்கு 14,725 ரூபாய் என்று நிர்ணயித்துள்ளது. பத்திர வெளியீட்டின்போது ஆன்லைனில் வாங்கியவர்களுக்கு ஒரு கிராம் 3,738 ரூபாய் என்ற விலைக்கு கிடைத்தது. அத்துடன் ஒப்பிட்டால், முன்கூட்டிய முதிர்வு விலையில் 10,987 ரூபாய், அதாவது 294 சதவீத லாபம் கிடைக்கிறது.
